யாராலும் அழித்தொழிக்க முடியாத வேதாகமம்...
Thu Aug 01, 2013 3:58 pm
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியிடப்பட்ட The Age of Reason எனும் நூல் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கியது. போற்றிப் புகழப்பட்ட இந்நூலின் ஆசிரியரான தாமஸ் பெயின் என்பார், உலகிலேயே மிகச்சிறந்த அறிவியலாளராக கருதப்பட்டார். அவருக்கு நிகராக எவரும் இருந்ததில்லை என்றே அனைவரும் எண்ணினர். தன்னுடைய அறிவியல் வாதங்களின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்த தாமஸ் பெயின், தன்னுடைய தர்க்கங்கள் அனைத்தும் வேதாகமம் நம்பகமற்றது என்பதை நிரூபித்துவிடும், அதன்பிறகு யாருமே வேதத்தை நம்பி அதை வாசிக்கமாட்டார்கள், வேதாகமம் அச்சிடப்படுவதும் நிறுத்தப்பட்டுவிடும் என அறிவித்தார். மட்டுமல்ல, தனது அறிவியல் தர்க்கங்கள் வெற்றியடைந்தபின் அமெரிக்காவில் ஐந்து வேதாகமங்கள்கூட இருக்காது என சவால் விட்டார். தாமஸ் பெயின் இவ்வாறு சவால் விட்டு 200 வருடங்கள் கடந்துவிட்டன. இன்று அவரது புத்தகத்தின் பிரதிகள் ஐந்தைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகமிக கஷ்டம். ஆனால் வேதாகமமோ ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. அவர் வாதிட்டதுபோல, அவருடைய தர்க்கங்கள் வேதாகமத்தை அழித்துவிடவில்லை. மாறாக, அவருடைய வாதங்களே இன்று அறிவீனமான கருத்துக்களாகிவிட்டன. ஏனெனில், “வேதாகமம் சிறந்த ஞானமுடைய தேவனுடைய வார்த்தையாயிருப்பதனால், எந்த ஒரு மனிதனுடைய அறிவாலும் அதை அழித்து விட முடியாது”...
நன்றி: பால் பிரபாகர்
நன்றி: பால் பிரபாகர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum