முழு கவனத்தோடு உங்கள் வேலையே செயுங்கள்
Wed Jan 16, 2013 9:27 am
ஒரு ஊரில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான், அவனை எல்லோரும் கேலி
செய்தார்கள்.என்ன செயல் செய்தாலும் கேலிக்குள்ளாகி மனம் வருந்தினான்.ஒரு
பெரியவரை அணுகி இதற்கு வழிகேட்டான். பெரியவர் ஒரு எண்ணெய் நிரம்பிய
கிண்ணத்தை அவன் கையில் கொடுத்து ஒரு சொட்டும் சிந்தாது ஊரைச் சுற்றி வரச்
சொன்னார்.அவனும் சிரத்தையோடு அதைச் செய்தான்.அப்போதும் ஊரார் கேலி
செய்தனர்.அவன் ஊர் சுற்றி வந்து எண்ணெய் கிண்ணத்தை பெரியவரிடம்
கொடுத்தான்."இன்று உன்னை யாரும் கேலி செய்ய வில்லையா?"என்று முனிவர்
கேட்டார்.'கேலி செய்தார்கள்.ஆனால் எண்ணெய் சிந்தக் கூடாது என்பதில் கவனமாக
இருந்ததால் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை.'என்றான் அவன்.
"உன்னுடைய கவனம் எல்லாம் நீ செய்யும் செயலில் இருந்ததால் மற்றவர்கள்
பேசியது உன் காதில் விழவில்லை.அத்துடன் செய்த காரியத்திலும் வெற்றி
அடைந்திருக்கிறாய்.அப்படி இருக்கும் போதுநீ எதற்காக மற்றவர்கள் பேசுவதற்கு
முக்கியத்துவம் கொடுத்து உன் காரியத்தை அரைகுறையாகச் செய்ய
வேண்டும்?எனவே,பிறர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்க்கையில்
முன்னேறத் தேவையான காரியங்களை முழு கவனத்தோடு செய்.அப்போது உன்னை யாரும்
கேலி செய்ய மாட்டார்கள்."என்றார் பெரியவர். அவன் தெளிவுடன் விடை பெற்றான்.
ஆம் நண்பர்களே, மற்றவர்கள் சொல்லும் அவதூறான வார்த்தைகளுக்கு நீங்கள்
முக்கியத்துவம் கொடுக்காமல், உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தினால்
வெற்றி நிச்சயம்.
“சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.”
பிரசங்கி 7:21
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum