கோப்புகளை அழிக்க, காப்பி செய்வதை தடுக்க - இலவச மென்பொருள்
Tue Jul 09, 2013 7:52 am
நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் நமக்குத் தேவையான அல்லது பல முக்கியமான கோப்புகள் இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அதை அழிக்கவோ அல்லது காப்பி செய்யவோ முடியும். இதை தடுக்க Prevent என்ற இந்த மென் பொருள் பயன்படுகிறது. இந்த மென் பொருளை நிறுவிய பின் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளக் கூடிய வகையில் ஏதாவது Key ஒன்றை தேர்வு செய்க. உதாரணமாக ctrl + B என ஏதாவது தேர்வு செய்து கொள்க.
தேர்வு செய்பின் Activate என்ற பட்டனை அழுத்துக. இதில் ஓ.கே கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் cut, paste, copy மற்றும் அழிக்கவோ முடியாது. மேலும் கோப்பின்மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் மன்பு தேர்வு செய்த Key - யை அழுத்தினால் போதும். அதாவது முன்பு ctrl + B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் அதுபழைய நிலைக்கு வந்துவிடும்.
இந்த மென் பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட முகவரிக்கு செல்க...
நன்றி: தமிழ்க்காரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum