மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..
Mon Jul 01, 2013 10:29 am
மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..
......................................................................
மாதுளம் பழத்தில் அநேக மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன.
மதுளையில் சுண்ணாம்பு சத்து,
தாது உப்புக்கள்,
இருப்பு சத்து
என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.
இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும்,
இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது.
உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது.
வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும்,
உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு.
மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம்.
இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிடுவதோடு,
பழமாகவே சாப்பிடுவதால் அனைத்துவிதமான நார் சத்துக்களும் நேரடியாக உடலுக்குக் கிடைக்கும்.
குழந்தைகளின் உடலுக்கு நீர்ச்சத்துக்களை அளிப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.
மாதுளம் பூக்களை உலர்த்தி காய வைத்து பொடி செய்து வைத்து வேளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருமல் நிற்கும்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.
உடம்பு குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால்,
ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.
புதிய இரத்தம் உற்பத்தியாகி விடும்.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்.
உடல் எடை கூடும்.
தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.
தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்னை போன்றவற்றிற்கு சிறந்தது.
இரத்த ஓட்டத்திற்க்கு ஏற்றது மாதுளை.
இவ்வாறு அநேக சத்துக்களை கொண்டதாக மாதுளை விளங்குகிறது.
இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் சாப்பிடலாமே.
உடல் நலம் காப்போம்..!
நோயின்றி வாழ்வோம்..!!
-உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

Re: மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..
Sun Feb 02, 2014 8:45 pm
மாதுளையின் மகத்துவம் தெரியுமா?
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றை உண்பதன் மூலம் மனிதன் பல உபாதைகளில் இருந்து விடுபடலாம்.
மாதுளையின் நன்மைகள்
* இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
* புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.
* தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது, பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது, குடற்புண்களை ஆற்றுகிறது, எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.
* மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
* தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
* மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.
* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும், காய்ச்சல் தணியும்.
* மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும், புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
மாதுளம்பூவின் பயன்கள்:
* மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
*மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
* மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
* மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
நன்றி: லங்கா சிரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum