நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள்
Sat May 04, 2013 8:02 pm
திருவள்ளுவர்
தினமும் உணவருந்தும்போது தன் மனைவி வாசுகியை அழைத்துத் தவறாமல் இலையின்
அருகில் ஒரு கிண்ணத்தில் நீரும், அதனோடு ஓர் ஊசியையும் வைக்கச் சொல்வார்.
அப்படியே செய்து வந்தார். எதற்கு இப்படி வைக்கச் சொல்கிறீர்? என்று ஒரு நாளும் தன் கணவரை அவர் கேட்டதில்லை.
திருவள்ளுவர் முதுமையில் தளர்வுற்றிருந்தபோது வாசுகியை அருகில் அழைத்து,
நான் தினமும் உணவருந்தும்போது இலையின் அருகில் ஒரு கிண்ணத்தில் நீரும்,
அதன் அருகில் ஒரு ஊசியையும் வைக்கச் சொல்வேன்.
நீயும் இதுநாள்வரை தவறாமல் வைத்து வந்தாய். நான் எதற்கு அவ்வாறு வைக்கச் சொல்கிறேன் என்று நீ இதுவரை என்னைக் கேட்டதில்லை.
அதன் காரணத்தை இப்போது கூறுகிறேன். நீ எனக்கு தினமும் உணவு பரிமாறும்போது
அதில் ஒன்றிரண்டு கீழே சிந்திவிட்டால் அதை இந்த ஊசியால் எடுத்து,
கிண்ணத்திலுள்ள நீரில் நன்றாக சுத்தம் செய்து இலையில் போட்டுக்கொள்ளத்தான்
அப்படிச் செய்தேன்.
ஆனால், அந்த ஊசிக்கான வேலை இதுவரை ஏற்பட்டதில்லை. ஒரு நாள்கூட உணவைக் கீழே சிந்தாமலேயே நீ பரிமாறியிருந்தாய் என்றார்.
> இப்படி ஒரு பொண்டாட்டி தான் நாட்டிற்கும், வீட்டிற்க்கும் தேவை. :) :) :) :):) :):) :):) :):) :)
"மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்." நீதிமொழிகள் 18:22
"அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது." நீதிமொழிகள் 31:11.
"அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி
நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப்
பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து அநேகம் பெண்கள்
குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று
அவளைப் புகழுகிறான்." நீதிமொழிகள் 31:27 to 29

Permissions in this forum:
You cannot reply to topics in this forum