பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் என்றால் என்ன?
Wed Apr 24, 2013 10:45 am
லீலி புஷ்பம் என்பதையே தமிழில் லில்லிமலர் என்கிறோம்.
இரவு நேரங்களில்--- பள்ளத்தாக்குகளில் லில்லி மலரும்போது மணம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
காற்று இனிமையாகச் சுமந்து செல்லும்.
அது செல்லுமிடமெல்லாம் நறுமணம் கமழும்.
நான்கைந்து கிலோ மீட்டருக்குத் தொலைவிலிருக்கிற வண்டினங்களைக் கவர்ந்து இழுக்கும்.
நற்க்குணங்களாகிய நறுமணத்தால் நாமும் ஈர்க்கமுடியுமே.
லீலி மலரின் மணம் வெள்ளை.அது பரிசுத்தத்திற்கு அடையாளம்.
இருளுக்கு மத்தியிலேயும் வெள்ளை நிறம் பளிச்சென்று பிரகாசிக்கும்.
நாமும் லீலி மலர்போல உலகத்தில் வெளிச்சமாய் ஒளி வீசுவோம்.
லீலி மலரின் தோற்றம் ஒரு எக்காளத்தைப் போலவே காணப்படுகிறது.
இயேசுகிறிஸ்துவின் வருகையைப் பரலோக எக்காளம் பூமிக்கு அறிவிக்கிறது(1தெச 4:16).
இஸ்ரேல் நாட்டில் எண்ணற்ற வண்ண மலர்கள் உண்டு. அழகழகான கட்டுப்பூக்கள்
உண்டு. ஆயினும் ஆண்டவர் தம் அன்புக் கரங்களில் லீலி மலரை
எடுத்துக்கொண்டார். “முள்ளுகளுக்குள்ளே லீலி புஷ்பம் எப்படி இருக்கிறதோ
அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்” (உன்
2:2) என்று நமக்கு உவமையாகக் கூறுகிறார்.
பள்ளத்தாக்கின் லீலி போன்று நாமும் உன்னத நறுமணம் பரப்புவோம். நற்சாட்சிகளாய் விளங்குவோம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum