”கை கடிகாரம்”
Wed Apr 24, 2013 10:22 am
ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில்
தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக
பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி
பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.
நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன்
கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல
பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.
சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர்
.சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை
என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.
ஒரு சிறுவன் மட்டும்
மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன்
என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.
மோட்டார்
கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே
வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும்
கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.
நான் உள்ளே சென்று
தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த
திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக
கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.
அமைதியான மனநிலையில் எந்த
ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை
எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு
கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.
நன்றி
Via-Ilayaraja Dentist.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum