கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்....
Fri Apr 12, 2013 6:24 am
பட்ஜெட்டிற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் தகுந்த மாடலை
தேர்வு செய்வது மிக மிக முக்கியம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சிறிய ரக
ஹேட்ச்பேக் கார் போதுமானது. அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்ட
குடும்பங்களுக்கு எஸ்யூவி அல்லது எம்பிவி மாடல்கள் பொருத்தமாக இருக்கும்.
அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட
செடான் ரக கார்களை தேர்வு செய்யலாம். தினசரி பயன்பாட்டிற்கு சிறிய கார்கள்
சிறந்தது. மேலும், மாதத்திற்கு 500 கிமீ.,க்குள் இருந்தால் பெட்ரோல் கார்
சிறந்தது. 1000 கிமீ., வரை இருந்தால் டீசல் காரை தேர்வு செய்வது நல்லது.
இது ரொம்ப முக்கியம் காரை தேர்வு செய்யும்போதே உங்களது பட்ஜெட்டையும்
தெளிவாக முடிவு செய்துவிடுங்கள். இதற்கடுத்து, விலை விபரம் குறித்து
டீலர்களில் விசாரணையை போடுங்கள். டீலருக்கு டீலர் விலை வித்தியாசம்
இருக்கும். மேலும், கார் வாங்கிய பின் சிறந்த சேவையை வழங்கும் டீலர்
குறித்தும் அறிந்து கொள்வது நல்லது.
எக்ஸ்சேஞ்ச் போனஸ் காரை
எக்ஸ்சேஞ்ச் செய்வதாக இருந்தால் டீலரிடம் அதற்கான போனஸ் விபரங்களை
தெரிந்துகொள்ளுங்கள். மேலும், டீலர் தெரிவிக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்
உண்மையிலேயே நியாயமாக இருந்தால் மட்டும் எக்ஸ்சேஞ்ச் செய்யவும்.
இல்லையென்றால், காரை வெளி சந்தையில் விற்பனை செய்ய முயற்சிக்கலாம். ஆன்லைன்
மூலமும் நேரத்தை வீணடிக்காமல் எளிதாக உங்களது காரை விற்பனை செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் தளமும் இந்த சேவையை வழங்குகிறது.
டெஸ்ட் டிரைவ்
காரை தேர்வு செய்தபின் ஷோரூமுக்கு சென்று டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.
மேலும், டெஸ்ட் டிரைவ் செய்யும்போது கார் பற்றிய நல்ல அனுபவம் உள்ள
உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்துச் செல்வதும் உகந்தது. காரின் இடவசதி,
தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கையாளுமை ஆகியவை
உங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தினால் அடுத்தக் கட்டத்துக்கு செல்லலாம்.
பைனான்ஸ் பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு
காருக்கு கடனுதவி அளிக்கின்றன. காருக்கு கடன் வாங்கும் முன் நம்பகமான வங்கி
அல்லது பைனான்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அவை வழங்கும்
வட்டிவிகிதங்கள், டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை
தெரிந்துகொண்டவுடன் வீட்டுக்கு வந்து ஒரு ஒப்பீடு செய்து அதி்ல் உங்களுக்கு
பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். உங்களது மாத வருமானம்
மற்றும் முன்பணம் ஆகியவற்றை கணக்கில்க் கொண்டு மாதத் தவணையை தேர்வு
செய்யலாம். (நம்பகமான நிறுவனம்என்பதற்கு அர்த்தம், சில நிறுவனங்கள் மாதத்
தவணை முடிந்தபின் ஆர்.சி புக்கை குறித்த நேரத்தில் அனுப்புவதில்லை.
ஆர்சி.,புக்குக்காக தொங்க வேண்டியதாகிவிடும்)
டீல் ஓகே கார்
மாடல், கார் கடன் உள்ளிட்டவற்றில் திருப்தி ஏற்பட்டபின் ஷோரூமுக்கு சென்று
காருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் இதர வாரண்டி விபரங்களை தெரிந்து
கொள்ளுங்கள். அனைத்திலும் திருப்தி ஏற்பட்டவுடன் காருக்கு முன்பதிவு
செய்யுங்கள். ஷோரூமுக்கு சென்றவுடன் முதலில் நீங்கள் எதிர்பார்க்கும்
வசதிகள், பட்ஜெட் உள்ளிட்ட விபரங்களை விற்பனை பிரதிநிதியிடம் தெளிவாக
எடுத்துக்கூறிவிடுங்கள். நேரமும், சில கசப்பான அனுபவங்களையும் நிச்சயம்
தவிர்க்க முடியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum