இரத்த தானம் செய்யலாமா?
Mon Apr 08, 2013 9:03 am
ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்
ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த
இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும்
உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி
இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்:
வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை, மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:
உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா,
பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு
உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய் வரும் வாய்ப்பு மிக குறைகிறது.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில்
தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது
உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால்
உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum