புரையேறுதல்:
Wed Apr 03, 2013 5:22 pm
உணவை உண்ணும்போது, தொண்டையிலிருந்து இறங்கும் உணவு, உணவுக்குழாய்க்குள்
செல்வதற்குப் பதிலாக, சுவாசக்குழாய்க்குள் சென்று விடுவதைப் ‘புரையேறுதல்’
என்கிறோம்.
என்ன காரணம்?
அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே உணவு உண்பது, உணவு
உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, உணவுக்குழாய்ப் புற்று நோய், தொண்டை
நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும். குழந்தைகளின் உணவுக்குழாயும்
சுவாசக்குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி,
வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப்பொருள்கள்கூட சுவாசக்குழாயை மிக
எளிதாக அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புரையேறியவுடன் இருமல் வரும்.
மூச்சுத்திணறும். பேசமுடியாது. முகத்தில் ரத்தம் தேங்கி, முகம் சிவக்கும்.
நெடு நேரம் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் உடல் நீலநிறமாக மாறும். அப்போது
உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.
என்ன செய்ய வேண்டும்?
புரையேறியவுடன் அதை வெளியேற்றுவதற்கு நம் உடலில் இயற்கையாகவே ஒரு வழிமுறை
உள்ளது. அதுதான் இருமல். இருமும்போது, சுவாசப் பைகளிலிருந்து கிளம்பும்
அழுத்தம் நிறைந்த காற்றால், சுவாசக்குழாய்க்குள் சென்ற உணவு உந்தி வெளியே
தள்ளப்படும்.
ஆகவே, பாதிக்கப்பட்ட நபரை அழுத்தமாக இருமச்
சொல்லுங்கள். சிலமுறை இருமினாலே பெரும்பாலான உணவுப்பொருள்கள் உடனே
வெளியேறிவிடும்; மூச்சுத்திணறல் குறைந்து விடும்.
இதில்
குறையாவிட்டால், அந்த நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கி
குனியச் சொல்லுங்கள். இப்போது நீங்கள் அவரது இரண்டு தோள்பட்டை
எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து
நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில்
வந்துவிடும்.
இதிலும் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அடுத்த
முயற்சியில் இறங்குங்கள். அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது
பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா
எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும்,
மேல்புறமாகவும், வலுவாக அழுத்தம் கொடுங்கள். உணவுப் பொருள் வெளியேறும் வரை
முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாற்றி மாற்றி
செய்யுங்கள். உணவுப்பொருள் வெளியேறிவிடும். இதிலும் உணவுப்பொருள்
வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லுங்கள். அங்கு ‘மூச்சுக்குழல் அக நோக்கி’ மூலம் உணவுப்பொருளை வெளியே
எடுத்து விடுவார், மருத்துவர்.
டாக்டர் கு.கணேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum