ஆடும் நாயும் ...
Mon Apr 01, 2013 3:41 pm
ரங்கனிடம் சில ஆடுகளும் ஒரு நாயும் இருந்தன. தினமும் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான்.கூடவே அவனது நாயும் செல்லும்.
மர நிழலில் ரங்கன் படுத்து உறங்க ...ஆடுகள் புல் மேயும்...அந்த ஆடுகளை ஓநாய் போன்றவை அணுகாமல் நாய் காக்கும்.
ரங்கன் தூங்கி எழுந்ததும்,தான் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் சாப்பாடு அளிப்பான்.இது ஆடுகளுக்கு பிடிப்பதில்லை.
ஒரு நாள் ஆடுகள் ரங்கனிடம் ' நாங்கள் உனக்கு பால் தருகிறோம்...நீ உயிர்
வாழ உதவுகிறோம்..ஆனால் நீயோ எங்களை நாங்களாகவே மேய விட்டுவிட்டு
...சும்மாயிருக்கும் நாய்க்கு உணவளிக்கிறாயே ' என்றன.
அப்போது
ரங்கன் ஆடுகளிடம் ' நீங்க சொல்வது சரி..ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்
இந்த நாய் ...நீங்களெல்லாம் மேயும் போது உங்களைப் பார்த்துக்
கொள்ளாவிட்டால் ஓநாய் வந்து தினசரி உங்களில் ஒருவரை கொண்டு சென்று
உணவாக்கிக்கொள்ளும்.
அப்படி நேராமல் உங்கள் உயிரைக் காக்கிறது இந்த நாய்' என்றான்.
ஆடுகளும் சிந்தித்துப் பார்த்துவிட்டு நாயின் முக்கியத்துவத் தை உணர்ந்தன.
இதை போலவே நம்மையும், நமது குடும்பத்தையும் வழி நடத்தும் மேய்ப்பரை நான்
ஏன் தாங்க வேண்டும் என்று தவறான சிந்தனைக்கு வழி வகுக்காதீர்கள்.
நம்மை ஓநாய்கள் தூக்கி சென்று விடாமல் எச்சரித்து , வேதத்தை போதித்து வழி நடத்துவோர் முக்கியமானவர்களே என்று உணருவோம்.
"நீயே ஆலயம்! உனக்கேன் ஆலயம்" போன்ற வஞ்சனைகள் செய்வாரோடு இணங்காமல், தேவ சபையில் ஐக்கியம் கொள்ளுங்கள்.
போதகரை குறித்து குறை பேச அல்ல தேவனை மகிமைப்படுத்தவே ஆலயம் செல்கிறோம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
இதுவே கிறிஸ்து உங்களில் விரும்புகிறார்.
1 Timothy 5:17-18
17நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும்
உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக
எண்ணவேண்டும்.
18போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum