இரத்த அழுத்தம் பற்றி சின்னதா ஒரு விஷயம்
Sat Mar 30, 2013 9:32 pm
இரத்த அழுத்தத்தில் இரண்டு அலகுகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
சாதாரண இரத்த அழுத்தம் 120/80 எனக் குறிக்கப்படுகிறது. மேலுள்ளது
சுருக்கழுத்தம் Systolic blood pressure (SBP), கீழுள்ளது விரிவழுத்தம்
Diastolic blood pressure (DBP) என அவை இருவகைப்படும். இதில் எதைக்
கட்டுப்படுத்துவது முக்கியமானது?
ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களில் சுருக்கழுத்தத்தை (SBP)
கட்டுப்பாட்டில் கொண்டு வருவதையே மருத்துவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்
என The Lancet என்ற சஞ்சிகையில் ஜீன் 18ல் இணையத்தில் வெளியான கட்டுரை
ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதற்குக் காரணம் என்ன? இப்பொழுது
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் 50 வயதிற்கு
பின்னர் பெரும்பாலானவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதும்
தெரிந்ததே. அவர்களில் விரிவழுத்தத்தை (DBP) விட சுருக்கழுத்தமே (SBP)
பெரும்பாலும் அதிகரிக்கின்றது. வயது கூடக் கூட சுருக்கழுத்தம் அதிகரித்துக்
கொண்டே செல்கிறது. ஆனால் விரிவழுத்தம் பொதுவாக 50 வயது வரையே
அதிகரிக்கிறது. அதற்கு மேல் அதிகரிப்பது குறைவு. அது மட்டுமல்ல பல
தருணங்களில் அது குறையவும் செய்கிறது.
இன்னொரு விதமாகப்
பார்த்தால் இரத்த அழுத்த நோயுள்ளவர்களில் 75% சதவிகிதத்திற்கு மேலானவர்கள்
50வயது அல்லது அதற்கு மேலான வயதுள்ளவர்களே. இவர்களுக்குதான் மாரடைப்பு,
பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதன் காரணமாக
இத்தகையவர்களது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மிக
முக்கியமானதாகும்.
முன்னைய காலங்களில் விரிவழுத்தம் (DBP) தான்
முக்கியமானது என மருத்துவ உலகில் ஒரு கருத்து நிலவியது. அதைக்
கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் இலக்காக இருக்க வேண்டும் என்றும்
சொல்லப்பட்டது.
ஆனால் மேற் கூறிய கருத்துக்களின் அடிப்படையில்
பாரக்கும் போது இக்கருத்து தவறானது, சுருக்கழுத்தமே முக்கியம் என்பது
வெளிப்படை. மேற் கூறிய கட்டுரையாளர்கள் ஒரு படி மேலே போய் 50வயதிற்கு
மேலானவர்களுக்கு சுருக்கழுத்தத்தை மட்டுமே அளவிட்டால் போதுமானது என்று
கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு காரணங்களைக் கூறுகிறார்கள்.
முதலாவது காரணம். சுருக்கழுத்தமானது மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் அதிக
தவறின்றியும் அளவிடக் கூடியது. அத்துடன் அதுவே மாரடைப்பு, பக்கவாதம்,
போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமும் ஆகிறது.
பிரஸர்
மானியுடன், ஸ்டெதஸ்கோப் கிடைக்காத நிலையில் நாடித்துடிப்பை தொட்டுப்
பார்பதன் மூலம் கூட சுருக்கழுத்தத்தை அண்ணளவாக அளவிட முடியும். அதனால்
மருத்துவர்கள் இல்லாதபோது, மருத்தவ தாதி அல்லது மருத்துவ உதவியாளர் கூட
இவ்வாறு சுலபமாக அளவிட முடியும். நோயாளிகளுக்கு கூட சிறு பயிற்சி மூலம்
சுருக்கழுத்தத்தை அளவிடுவதற்கு பழக்கிவிடலாம். எனவே அளவிடுவதும்,
கட்டுப்படுத்துவதும் இலேசானது.
ஆனால் இப்பொழுது சுலபமாக வாங்கக் கூடிய இலக்ரோனிக் பிரஸர் மானிகளை எந்த
மருத்துவ அறிவு இல்லாதவரும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் இயக்கி, பிரஸரை
உடனடியாக அறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இரண்டாவது காரணமாவது, தனது பிரஸர் என்ன, அது எவ்வளவாக இருக்க வேண்டும்
என்பதற்கு இரண்டு அலகுகளை வைத்துக் கொண்டு நோயாளிகள் குழம்ப வேண்டியதில்லை.
மேலும் அந்த இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியும் அவர்களுக்கு எழாது.
மருத்துவர்களும் கூட அதுவா இதுவா முக்கியம் என அல்லாட வேண்டியதில்லை
என்பது மூன்றாவது காரணமாகும். நான்காவதாக, பிரஸர் பற்றிய விழிப்புணர்வுப்
பரப்புரைகளை சுகாதார இலாகாவினர் பொது மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும்
திட்டமிடுவதற்கும் கூட ஒரு இலக்கமென்பது சுலபமாயிருக்கும்.
சரி
இப்பொழுது உங்களது பிரஸருக்கு வருவோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட உங்கள்
பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும். 140/90 க்கு மேற்படாது இருக்க வேண்டும்.
நீரிழிவும் சேர்ந்திருந்தால் 130/80 க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்றே
இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் மேற் குறிப்பிட்ட புதிய முறையில் கூறுவதாயின்
இவற்றை முறையே 140, 130 என்று நீங்கள் குறிப்பிட்டால் போதுமல்லவா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum