இந்தியா-....
Sat Mar 30, 2013 9:01 pm
* இந்தியாவின் பரப்பளவு - 32,87,263 சதுர கி.மீ (இன்றைய பரப்பளவு குறைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல)
*மக்கட்தொகை - 110 கோடி
*தலைநகரம் - புதுதில்லி
*தேசிய மொழிகள் - 18
*இந்தியாவின் மிகப்பெரிய ஏரி - ஊலார் ஏரி (காஷ்மீர்)
*இந்தியாவின் மிகநீளமான நடைபாதை - இராமேஸ்வரம் கோவில் நடைபாதை
*இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா - கங்கை டெல்டா
*இந்தியாவின் மிகப்பெரிய நகரம் - கொல்கொத்தா
*இந்தியாவின் மிகப்பெரிய மசூதி - ஜீம்மா மசூதி, டெல்லி
*இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில் - எல்லோரா (மகாராஷ்ட்ரம்)
*இந்தியாவின் மிக உயரமான சிகரம் - நந்தாதேவி
*இந்தியாவிலேயே மிக அதிகமாக மழை பொழியும் இடம் - மௌசின்ரம் (மேகாலயா)
*இந்தியாவின் மிக நீளமான தொங்குபாலம் - ஹெளரா பாலம் (கொல்கொத்தா)
*இந்தியாவிலேயே மிகவும் காடுகள் நிறைந்த மாநிலம் - அஸ்ஸாம்
*இந்தியாவிலேயே மக்கட்தொகை அதிகமான மாநிலம் - உத்திரபிரதேசம்
*இந்தியாவிலேயே பரப்பளவில் பெரிய மாநிலம் - இராஜஸ்தான்
*இந்தியாவின் மிக உயரமான கோபுரம் - குதுப்மினார்
*இந்தியாவின் மிக உயரமான அருவி - ஜோக் ஃபால்ஸ் (கர்நாடகம்)
*இந்தியாவின் மிகநீளமான தொடர்வண்டி நடைமேடை - கொரக்பூர் (ஒரிசா)
*இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் - தார் (இராஜஸ்தான்)
*இந்தியாவின் மிகநீளமான அணைக்கட்டு - ஹிராகுட் அணை (ஒரிசா)
*இந்தியாவின் மிக உயரமான சிலை - கோமதீஸ்வரா (கர்நாடகம்)
*இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா - கொல்கொத்தா விலங்குக்காட்சிசாலை
*இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - இந்தியன் அருங்காட்சியகம் (கொல்கொத்தா)
*இந்தியாவின் மிகவுயர தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - டெல்லி (235 மீ)
*இந்தியாவின் மிகநீளமான சாலைப்பாலம் - நேரு சேத்து - சோனி ஆறு (306 மீ)
*இந்தியாவின் மிகநீளமான ஆறு - கங்கை
*இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் - லடாக்
*இந்தியாவின் மிகவிரைவான தொடர்வண்டி - சதாப்தி
*அதிவிரைவுவண்டி (டெல்லி - போபால்)
*இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
*சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் - மவுண்ட் பேட்டர்ன்
*இந்தியாவின் முதல் மொகாலயப் பேரரசர் - பாபர்
*இந்தியாவின் முதல் திரைப்பட நடிகர் முதலமைச்சர் - எம்.ஜி. இராமச்சந்திரன்
*இந்தியாவிலேயே முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் - பானு ஆதியா
*உலகின் தென்துருவத்தை அடைந்த முதல் இந்தியர் - கே. பஜாஜ்
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் - டென்சிங்
*ஆக்ஸிஜன் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் - பூடோர்ஜி
*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர்
*இந்தியாவின் முதல் பேசும் படம் - ஆலம் அரா (1931)
*இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு
*இந்தியாவின், தேர்தலில் பதவியை இழந்த முதல் பிரதமர் - இந்திரா காந்தி
*இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுஜேதா கிருபளானி
*இந்தியாவின் முதல் பத்திரிகை - பெங்கால் கெசட் (1781)
*இந்தியாவின் முதல் வண்ணப்படம் - ஆன் (1952).
Permissions in this forum:
You cannot reply to topics in this forum