வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்டவிரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்
Sun Jul 01, 2018 10:59 pm
வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்டவிரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாகஉள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்ப தில்லை. இவ் வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார். அந்த உண்மை சம்பவம் இதோ…இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது மும்பை. மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர் . கடந்த மாதம் 18ம் தேதி காலை தன்காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சில பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. சில பஸ்கள் மிக வும் தாமதமாக வந்தன.
இதனால் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் ‘லிப்ட்’ கேட்டு கொண் டிருந்தனர். அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் ‘லிப்ட்’ கேட்டனர். அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். 2பேர் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தி ல் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர் என்ற பகுதிக் கு செல்ல வேண்டும். காந்தி நகரை கடந்துதான் நிதின் நாயர் தனது அலுவலகத் திற்கு செல்ல வேண்டியிருந்தது.
இதனால் அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்ட நிதின் நாயர், பெருந்தன்மை யுடன் மூவரையும் தன் காரில் ஏற்றி கொண்டார். சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். உடன் பயணிப் பவர்கள் யார்? என்ற கேள்வியை போலீஸ் அதிகாரி கேட்க, நடந்த வற்றை நிதின் நாயர் கூறியிருக்கிறார்.
உடனடியாக நிதின் நாயரின் லைசென்ஸை அந்த போலீஸ் அதிகாரி பறிமுதல் செய்ததோடு, அபராதம் விதிப்பதற்கான ரசீது ஒன்றை மளமள வென எழுதி, நிதின் நாயரிடம் ஒப்படைத்து விட்டார். எதற்காக இந்த தண்டனை? என்பதே நிதின் நாயரு க்கு புரியவில்லை.
எனவே அதற்கான விளக்கத்தை போலீஸ் அதிகாரியிடமே கேட்க ”தெரியாத நபர்களுக்கு ‘லிப்ட்’ கொடுப்பது சட்டவிரோதம்” என்ற அதிர்ச்சிகரமான பதிலை, போலீஸ் அதிகாரி வழங்கியுள்ளார்.
நிதின்நாயர் இதனை நம்பவில்லை லஞ்சம்பெறுவதற்காக போலீஸ் அதிகாரி சுற்றி வளைப்பதாகவே நினைத்தார். ஆனால் போலீஸ் அதிகாரி மிகவு ம் கடுமையாக நடந்துகொண்டார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் வந்து அபராதத்தை கட்டிவிட்டு, லைசென்ஸை வாங்கி கொள் ளும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார். அபராதத்திற்கான ரசீதை மட்டும் நிதின் நாயரிடம் அவர் வழங்கிவிட்டார்.
நிதின் நாயருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த குழப்பத்துட னே மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். இந்திய மோட்டார் வாகன சட்டம் 66/192 ( Indian motor vehicle act 66/192)ன்கீழ் தண்டிக்கப்பட்டிருப்ப தாகவும், அதனால் கோர்ட்டிற்குசென்று அபராதம் கட்டி, தான் லைசென்ஸை ( License ) திரும்ப பெற வேண்டும் எனவும் போலீ சார் கூறியுள்ளனர்.
உடனடியாக தனக்குதெரிந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் தனியார் வாகனத்தில் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது தவறு என்ற சட்டம் உண்மையிலேயே இருப்பதவருக்கு தெரியவந்தது.
வேறு வழியின்றி கோர்ட்டிற்கு சென்ற நிதின் நாயன், உதவி செய்ய வேண்டும் என் ற நோக்கத்தில், தெரியாத நபர்களுக்கு ‘லிப்ட்’ கொடுத்து தனது தனிப் பட்ட காரை, பயணிகள் கார் ஆக மாற்றிய ‘குற்றத்தை’ அவர் நீதிபதி முன் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கோர்ட் நடைமுறைகளை முடித்து கொண்டு, மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற நிதின் நாயரை, “இனி யாருக்காவது ‘லிப்ட்’ கொடுத் தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்” என எச்சரித்து அனுப்பினர் .
இதனால் மிகவும் மனம் நொந்துபோன நிதின் நாயர், இப்படிப்பட்ட சட்டங்கள் இருந் தால், சாலையில் யாரேனும் இறந்துகிடந்தால்கூட, யாரும் உதவி செய்ய முன் வர மட்டார்கள் என பேஸ்புக் பக்கத்தின் தனது குமுற லை கொட்டியுள்ளார்.
எந்தஒரு நபரும் தனது தனியார் வாகனத்தை பயணிகள் வாகன மாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் ( Indian Motor Vehicle Act ) விதிகள் இருப்பது உண்மைதான். இந்த சட்டத்திற்கு 2 காரணங்கள் உள்ளன.
முதல்காரணம், வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் T-பெர்மிட் அல்லாத தங்கள்சொந்த வாகனங்களை, டாக்ஸி யாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்டவிரோதமாக அவர்கள் பணம் சம்பா திக்கின்றனர். இரண்டாவது காரணம், வாகன உரிமையாளரின் பாதுகா ப்பு. தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுக்கும்பட்சத்தில், ஆள் நடமாட்ட மில்லாத பகுதியில் வரும்போது, முன்பின் தெரியாத அந்நபரால், வாக னத்தின் உரிமையாளருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக் கூடும். இதனால் தான் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
எனவே நண்பர்களே ஒருவருக்கு லிப்ட் கொடுக்கும் முன் பாக ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்து கொள் ளுங்கள். இப்படி ஒரு சட்டம் இருப்பதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum