பிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை! ஏன்?
Mon Jun 25, 2018 2:46 pm
நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தில் இணைந்திருக்கும் சம்பளதாரர்கள் கூட இந்தத் திட்டத்தில் சேரலாம்.
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் ஒருபக்கம் செயல்பட்டு வந்தாலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்களின் எதிர்கால நலனையும் கருத்தில்கொண்டு அரசு கொண்டு வந்த திட்டம்தான் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம்.
இபிஎப் திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி மாதா மாதம் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது இபிஎஃப் (Employees' Provident Fund -EPF) கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், நிறுவனங்களில் பணியாற்றாத மற்ற வருவாய் ஈட்டும் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்களது வருங்கால பாதுகாப்பு நிதியை உருவாக்க, பிபிஎஃப் ( Public Provident Fund - PPF) திட்டத்தில் சேரலாம். இத்திட்டம், இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், அதிக வட்டியுடன், வரி இல்லாமல் சிறந்த லாபத்தை அளிப்பதாக உள்ளது. இதில் சேர்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தன்னார்வத்துடன் சேரும் திட்டம் என்பதால், இத்திட்டம் தன்னார்வ பங்களிப்பு நிதி (விசிஎஃப் - voluntary contribution fund) திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
கணக்கு தொடங்குவது எப்படி?
இந்த பிபிஎப் கணக்கில், வருடத்திற்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலான தவணையுடன் முதலீட்டைத் தொடரலாம். பணத்தை அதிகபட்சமாக வருடத்திற்கு 12 தவணையில் செலுத்தலாம். அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தில் பணத்தை சேமிக்க இயலும். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு தற்போது 7.6% சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் நீங்கள் பெறும் லாபத்திற்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரி ஏதும் விதிக்கப்படாது.
ஒருவேளை ஏதேனும் ஒரு வருடம் உங்களது கணக்கில் 500 ரூபாய் செலுத்தமுடியாமல் போனால் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும். அதே சமயம் இந்தக் கணக்கில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிக்கவும் தடை இல்லை. ஆனால், கூடுதலாகச் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வித வட்டியும் வழங்கப்படாது.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் மேற்கூரிய பிரிவினர் மட்டுமல்லாது, நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தில் இணைந்திருக்கும் சம்பளதாரர்கள் கூடச் சேரலாம். இப்போதைக்கு வங்கி சேமிப்பு மற்றும் வைப்பு நிதி திட்டங்களில் அளிக்கப்படும் வட்டியை விடக் கூடுதலாக, அதே சமயம் முதலீட்டுக்கும் பாதுகாப்பு இருக்கும் சேமிப்பு திட்டங்களில் மிகச் சிறந்த திட்டமாக பிபிஎஃப் திட்டம் உள்ளது.
வரி விலக்கு பயன்
இபிஎஃப் திட்டமும் பிபிஎஃப் திட்டமும் ஒரே விதமான கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் பிபிஎஃப் திட்டத்தில், சேமிக்கும் தொகை எவ்வளவு என்பதை நமது விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. சம்பளதாரர்கள் ஏற்கெனவே இபிஎஃப் திட்டத்தில் இருப்பதால், அவர்கள் தனியாக பிபிஎஃப் திட்டத்தில் சேர வேண்டிய அவசியமில்லை. தங்களது இபிஎஃப் திட்டம் மூலமே, சேமிக்க விரும்பும் தொகையை பணியாற்றும் நிறுவனத்தின் கணக்காளர் மூலம் பிடித்தம் செய்யச் சொல்லலாம். அதே சமயம், இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்டு பணியாளரின் இபிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் தொகைக்கு நிறுவனத்தின் பங்களிப்பு எதுவும் இருக்காது.
இத்திட்டத்தில் சேர்வதன் மூலம் 1.5 லட்சம் ரூபாய் வரைக்கும் வருமான வரி விலக்கு உள்ளது என்பதால், குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக வரும் கூடுதல் வருவாயை இந்தத் திட்டத்தில் சேமித்து வரி விலக்கின் பயனை அனுபவிக்கலாம். கணக்கைத் தொடங்கிய பிறகு மூன்றாவது நிதியாண்டு முதல் ஐந்தாம் நிதி ஆண்டின் இறுதி வரை கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு வேலை நீங்கள் சேமித்து வந்துள்ள பணத்தை இடையில் எடுக்க வேண்டும் என்றால், கணக்கு காலாவதியான பிறகு 5 வருடத்திற்குப் பிறகு 50 சதவீத பணத்தை எடுக்க இயலும்.
எனவே பிபிஎஃப் திட்டம் மூலமான முதலீடு சுய தொழில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல சம்பளதாரர்களுமே பரிசீலிக்க வேண்டிய ஒரு நல்ல சேமிப்புத் திட்டம்தான்.
பிபிஎஃப் கணக்கை எப்படித் தொடங்குவது?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பிஎன்பி போன்ற அதற்கென நியமிக்கப்பட்ட வங்கிகளில், எந்தெந்த கிளைகளில் அதற்கான வசதி உள்ளது என்பதை அந்தந்த வங்கிகளின் இணையதளத்தைப் பார்த்தோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கி கிளை ஒன்றுக்கே நேரடியாகச் சென்றோ தெரிந்துகொண்டு கணக்கைத் தொடங்கலாம். மேலும் தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம்.
ஒரு சில வங்கிகள் அவர்களது இணையதளத்திலேயே இந்த கணக்கைத் தொடங்குவதற்கான வசதியைக் கொண்டுள்ளதால், அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சில வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மூலம் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கும் வசதியைக் கொடுக்கின்றன. மேலும் தபால் அலுவலகத்திலிருந்து வங்கிக்கோ அல்லது வங்கியிலிருந்து தபால் அலுவலகத்துக்கோ பிபிஎஃப் கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
தேவையான ஆவணங்கள் ?
* முழுமையாக நிரப்பப்பட்ட பிபிஎஃப் படிவம்
* அடையாள சான்று: டிரைவிங் லைசென்ஸ், பான் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒன்று
* வீடு மற்றும் நடப்பு முகவரிக்கான சான்று
* சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum