போலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...
Sat Feb 03, 2018 9:21 pm
அநேக சபைகளும், விசுவாசிகளும் முழுக்க முழுக்க மனோத்துவ முறையில் போலி எழுப்புதலை தூண்டிவிட்டு உணர்ச்சிகளை எழுப்பிவிடுகின்றனர். திரும்பப் பாடப்படும் ஒரு பாடலின் வரியும், ஒவ்வொரு முறை அந்த வரி பாடப்படும் போதும் ”டெம்போ” அதிகரிக்கப் படும் டிரம் சப்தமும் உரக்கப் பேசப்படும் அந்நிய பாஷைகளும் ஆவியானவர் நம் மத்தியிலே பொங்கிப் பொங்கி வந்து விட்டார் என்ற “மாஸ் சஜஷனை (Mass suggestion)” உங்களுக்குள் தோற்றுவிக்கக் கூடும். பாடப்படும் பாடல்களை குறைகூறவில்லை. அது அற்புதமான அருமையான பாடல்கள்தான். ஆனால் அது ஒரு தவறான நோக்கத்துகாக பயன்படுத்தப் படுவதைத்தான் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது நமது கடமை.
தேவன் என்னை அளவில்லாமல் ஆவியால் நிறைத்து அந்த ஆவியானவர் தரும் உன்னத பெலத்தினால் கிறிஸ்துவுக்காக ஜெயங்கொண்டவனாக ஜீவிக்க வேண்டும் என்ற தணியாத வாஞ்சையும், மான்கள் நீரோடை வாஞ்சித்துக் கதறுவது போல என் தேவனுடைய சமூகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தாகமும் நமக்குள் இருந்தால் ஆவியானவர் தண்ணீரூற்றாக அல்ல காட்டாற்று வெள்ளமாகவே நம் மத்தியில் பாய்ந்து வந்து நம்மை மூழ்கடித்து நீச்சல் ஆழம் நடத்திச் செல்லமாட்டாரா என்ன? அந்த அனுபவத்துக்குள் நம்மை நடத்திச் செல்ல தாழ்மையும் தாகமுமே அவசியம் தாரை தப்பட்டை அல்ல. இவர் உடுக்கை அடித்தால் இறங்கும் ஆவி அல்ல, உடைந்த உள்ளங்களுக்குள் இறங்கும் ஆவி.நிஜத்தையும் போலியையும் இனங்காணுதல் அவசியம். நாம் சரியாகப் பகுத்தறியத் தக்கவர்களாயிருந்தால் தேவன் மகிழுவார்.
நீ… அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்… அறிந்திருக்கிறேன். (வெளி 2:2) என்று எபேசு சபையாரை அவர் பாராட்டுவதை மறந்துவிடக்கூடாது.சில நல்ல சபைகளும் ஊழியக்காரர்களும் கூட இத்தகைய அனுபவங்களை தழுவிக்கொள்ளுவதைப் பார்க்கும் போது துக்கமாக இருக்கிறது. பெரும்பாலான நல்ல ஊழியர்கள் கூட வேதத்தை சரிவர ஆராயாமல் பிரபல ஊழியக்காரர்கள் செய்கிறார்கள் அதனால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதற்காகவும், தாங்கள் விட்டுவந்த சபைகளின் வழக்கத்தின் படியேயும் இத்தகைய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். விசுவாசிகளும் மேய்ப்பன் எவ்வழியோ மந்தை அவ்வழி என கண்ணை மூடிக்கொண்டு அதை பின்பற்றுகிறார்கள்.இவர்கள்கிறிஸ்துவுக்காக உண்மையாக சாட்சியிடுகறவர்கள் அல்ல.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum