"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்" (EVM) பற்றிய பார்வை
Tue Dec 19, 2017 5:44 pm
இது பெரியார் தேசம்
37 mins ·
"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்" (EVM) பற்றிய என்னோட பார்வை. கண்டிப்பாக படித்து ஷேர் செய்யவும்.
- சுவாதி, திருநெல்வேலி
கடந்த இரண்டு வருடமாக இந்த கார்ப்பரேட்/ RSS ஆட்சிக்கு எதிராக மக்களிடையே(பக்தாள் பற்றி சொல்லவில்லை) விழிப்புணர்வு வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. எந்த ஒரு ஆட்சி மாற்றமும், நடுநிலை மக்கள் மற்றும் முதல்முறை ஓட்டு போடுபவர்களால் தான் நடக்கிறது (கிட்டத்தட்ட 25-30% இதில் அடங்கும்). இந்த மக்கள் தான் 2014ல் மோடியின் போலி தேசபக்தி, பஞ்ச் டயலாக், பொய்யான விளம்பரத்தை நம்பி என்னைப் போல மோடிக்கு ஓட்டு போட்டு பிரதமர் ஆக்கியவர்கள். இப்போது மோடியின் முகமூடி கிழிந்த காரணத்தால் இந்த மக்களுக்கு மோடி எதிரி ஆகி இருக்கிறார். நாடு முழுவதும் 2014ல் காங்கிரஸ்க்கு எதிராக வீசிய அலைக்கு மேல் இப்போதே மோடிக்கு எதிராக வீச ஆரம்பித்தது அதிசயம் இல்லை.. இப்படி ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சியின் ஓட்டு சதவிகிதம் மட்டும் கூடுவது எல்லோருக்கும் எழும் சந்தேகம் தான். இந்த ஓட்டு விகிதம் கூடுவதற்கு "வோட்டிங் மெஷின்" ஒரு காரணமா என்று பார்ப்போம். அதற்க்கு தான் இந்த கட்டுரை.
EVM has three units,
1. Ballot Unit - ஓட்டு போடும் எந்திரம்
2. Control Unit - ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்
3. VVPAT - உங்கள் ஓட்டுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம்
இதுவரை பிரச்சனைகள்னு மக்கள் சொன்னது.
1. காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டா பிஜேபி லைட் எரியுது.
2. காங்கிரஸ்க்கு ஓட்டு போட பட்டன் அழுத்த முடியவில்லை.
3. ப்ளூடூத்/ wifi கனெக்ட் ஆகுது.
4. VVPAT - நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டேன் ஆனால் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மாதிரி receipt வருது.
5. EVM Rigging, Tampering.
மேலே உள்ள எல்லாமே உண்மையில் மெஷின் பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. Or EVMல் இருக்கும் மிகப்பெரிய இமாலய திருட்டை மறைக்க பிஜேபி வழக்கம் போல செய்யும் சின்ன கிரிமினல் வேலையாக இருக்கலாம். அந்த மிகப்பெரிய EVM தவறு பற்றி கீழே விவரிக்கிறேன்.
மோடி & அமித்ஷா என்ன ஜோல்னா பை போட்டுட்டு, குச்சி மிட்டாய் சப்பிட்டே ஸ்கூல்க்கு போர குட்டி பசங்களா என்ன மேலே உள்ள மாதிரி தப்பு பண்ண!!. தீர்ப்பு தனக்கு எதிரா வரும்னா ஜட்ஜ்'ய போட்டு தள்ளிட்டு யாராவது பாத்த அவர்களையும் அந்த இடத்தில தடயம் இல்லாம முடிச்சுட்டு போறவங்க. 38 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர் அமிட்ஷா.
அந்த மெகா EVM கோல்மால் எதுவாக இருக்கும்? எது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றால்,
EVM control unit (ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்) யில் "மைக்ரோ சிப்" மற்றும் அதில் ஒரு சாப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும். இதை உங்களுக்கு தேவையான மாதிரி நீங்கள் ப்ரோகிராம் பண்ண முடியும். உதாரணத்துக்கு, ஒரு ஓட்டு சாவடியில் மொத்தம் பதிவான ஓட்டு 1000 என்று வைத்து கொள்வோம்.. தாமரை சின்னத்துக்கு மேல் வேறு சின்னம் அதிகம் ஓட்டு வாங்கி இருந்தால் அவர்களின் ஓட்டில் இருந்து 5% ஓட்டை தாமரைக்கு மாற்ற முடியும். இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். அந்த சாவடியில் உண்மையில் காங்கிரஸ் 48% (480) ஓட்டும் பிஜேபி 41% (410) வாங்கி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. கடைசியில் ஓட்டு எண்ணிக்கை வரும் போது காங்கிரஸ்க்கு அந்த மெஷின் 430 (48%-5%=43%) என்று காட்டும். பிஜேபிக்கு 460(41%+5%=46%) என்று காட்டும். இந்த 5%.. 2% இருக்கலாம்.. or 10% கூட இருக்கலாம். இந்த மென்பொருள் திருட்டுத்தனம் எல்லா வோட்டிங் மெஷின்லையும் இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை ஒரு கட்சிக்கு சார்பாக மாற்ற முடியும்.
Control Unitக்கு தேவையான "மைக்ரோ சிப்" ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இதே நிறுவனம் தான் மோடி மற்றும் அவரது தலைமை அதிகாரி (Chief Secretary) சேர்ந்து மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 கோடி காஸ் ஊழலில் மாட்டியது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.(check the link in the comments). அப்போது மோடிக்கு கீழ் பணிபுரிந்த அதே அதிகாரி தான் இப்போது எலேக்சன் கமிஷின் தலைவர். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு புரியும்.
கீழே உள்ள கேள்வி பதில் படித்த பின்பும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும்.. நான் பதில் சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது.
1. இந்த மென்பொருள் திருட்டினால் ஒரு கட்சியின் வெற்றியை மாற்ற முடியுமா?
யெஸ். எங்கெல்லாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (for example, 5% vote difference) பிஜேபி தோற்க இருக்கும் இடங்களில் EVM booster ஓட்டின் மூலம் வெற்றிபெறும்.
ஒரு உதாரணத்திற்கு, இதனால் ரிசல்ட் எப்படி மாறும் என்றால் பிஜேபி 10000 ஓட்டில் தோற்க வேண்டிய இடத்தில் 5000ல் தோற்கும்.. 2000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி தோற்க வேண்டிய இடத்தில் 3000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வெறும். 5000 ஓட்டில் வெற்றி பெற வேண்டிய இடத்தில 10000 ஓட்டில் வெற்றி பெரும்.
2. எவ்வளவு நாளாக இது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது?
என்னோட தனிப்பட்ட கருத்துப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலே இது நடந்து கொண்டு இருக்கலாம்.
3. பீகார், பஞ்சாப் மற்றும் இடைத்தேர்தல் அனைத்திலும் பிஜேபி தோல்வி கண்டதே??
கேள்வி ஒன்றுக்கான பதில் தான். அங்கெல்லாம் இந்த சாப்ட்வேர் கோல்மால் இருந்து தான் இருக்க வேண்டும். ஆனால் பிஜேபியால் 40% ஓட்டு கூட வாங்கி இருக்க முடியாது. உண்மையில் அங்கு அவர்கள் இதை விட மிகவும் மோசமாக தோற்று இருக்க வேண்டும்.
4. குஜராத்தில் இந்த கோல்மால் நடந்து இருக்குமா?
கண்டிப்பாக. வாக்குகள் என்னும் போது, உண்மையாக கிடைத்த ஓட்டுக்கு மேல் 4-5% வாக்குகள் பிஜேபிக்கும். உண்மையாக கிடைத்த வாக்குக்கு கீழ் 4-5% காங்ரஸ்க்கு control unit காட்டும். So congress has to get at least 50% real vote to form the government. At the same time, BJP can form the government with just 40% real vote share.
5. அப்படின்னா மோடி எதற்கு இப்படி அழுது, கோமாளித்தனம் செய்து வோட்டு கேக்க வேண்டும்?
பிஜேபி அந்த குறைந்தபட்ச (35% or 40%) ஓட்டை வாங்கிதான் ஆக வேண்டும். அதற்க்கு மேல் 2% or 5% or 10% EVM சாப்ட்வேர் மூலம் கிடைக்கும். மொத்தமாக ஓட்டு எல்லாம் பிஜேபிக்கு போகிற மாதிரி செய்தால் மாட்டிக்கொள்ள மாட்டார்களா என்ன??
6. EVM டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு தான தேர்தலுக்கு பயன் படுத்துவார்கள்?
யெஸ். எல்லா கட்சியினர் முன்னாலும் இது சோதனைக்கு உட்படும். ஆனால் யாரும் 1000 ஓட்டு போட்டோ or சாப்ட்வேர் டெஸ்டிங் மாதிரி வித்தியாச வித்தியாசமாகவோ சோதனை செய்வது இல்லை. EVM booser vote can add only on the day of counting. எண்ணிக்கையில் அதிகம் காட்டுவது தேர்தல் ரிசல்ட் அன்று மட்டும் தான் நடக்க வேண்டும் என்று மென்பொருள் எழுதுவது 5 நிமிட வேலை. ஒட்டுமொத்த இந்த கிரிமினல் வேலையை செய்ய ஒரு 2 வருஷம் C or Micro controller அனுபவம் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் போதும்.
7. எக்ஸிட் போல் ரிசல்ட் எல்லாம் மோடிக்கு சாதகமாக வருகிறதே?
மோடி & அமித்ஷாக்கு இதெல்லாம் ஒரு மேட்டர்ரே இல்லை. பெரிய பெரிய international எஜென்சி கிட்டவே இவர்களால் காசு கொடுத்து மோடி பற்றிய +ve ரிப்போர்ட், நம்ம எகானமி பத்திய ரிப்போர்ட் மாத்த முடியுதுன்னா.. இதெல்லாம் சப்ப மேட்டர். மேலும் இப்போது அனைத்து தேசிய ஊடகங்களும் அவர்களின் கையில் தான்.
8. இதைப் பற்றிய விழிப்புணர்வு வரவில்லையே?
இப்போது தான் விழிப்புணர்வு வர ஆரம்பிச்சு இருக்கு.. 1. குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனு போன வாரம்.. counting machine ஓட்டை VVPATயுடன் verify பண்ண. எலெக்க்ஷன் கமிஷின் உடனடியாக மறுத்து விட்டது. 2. Congress filed a similar case in சுப்ரீம் கோர்ட். சுப்ரீம் கோர்ட் அதை உடனடியாக கேன்சல் செய்து விட்டது.
இந்த நாடு ஒரு மிக மோசமான சூழலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. [size=0]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum