வியாக்கியானப் பிரசங்கத்திற்கு அத்தியாவசியமான சாதனங்கள்
Thu Nov 30, 2017 6:35 pm
வியாக்கியானப் பிரசங்கம் செய்வதில் இன்று போதகர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆத்துமாக்கள் வேத அறிவில் வளர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டுமானால் இதைத்தவிர வேறு வழியில்லை. சபை மேடைகளில் கோமாளிக்கூத்து நடத்திக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் இது இலகுவான செயலாக இருக்காமல் போனாலும் இதன் மூலம் மட்டுமே கர்த்தரின் சபை ஆவிக்குரிய உணவைப்பெற்று வளர முடியும்.
வியாக்கியானப் பிரசங்கம் செய்வதற்கு என்ன தேவை?
1. முதலாவதாக கடுமையாக உழைக்கக்கூடிய போதகர்கள் தேவை. சோம்பேறித்தனமுடையவர்கள் இவ்வூழியத்தில் ஈடுபட முடியாது. ஏனெனில் வேதத்தில் அதிக நேரத்தை செலவிட்டு ஆராயவும், படிக்கவும் வேண்டும். ஆகவே தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து வேதத்தைப் படிப்பதிலும், ஜெபிப்பதிலும், பிரசங்கம் தயாரிப்பதிலும் போதகர்கள் ஈடுபட வேண்டும் (அப்போஸ். 6:4).
2. போதகர்கள் வேதத்தைப் படிக்கத் தேவையான சாதனங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். சொல்லகராதி, வேதநூல்களை விளக்கும் நல்ல விரிவுரை நூல்கள், முடிந்தால் மூல மொழிகளில் அறிவு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். அத்தோடு பழைய, புதிய ஏற்பாட்டு அறிமுக நூல்கள், அதாவது அவற்றின் வரலாற்றை எடுத்துக் கூறும் நூல்களை வாசிப்பதும் அவசியம். இவை வேத நூல்களின் வரலாற்றுப் பின்னணியை எடுத்து விளக்கும். இவற்றோடு வேதத்தை விளங்கிக் கொள்வதில் நாம் பயன்படுத்த வேண்டிய விதிமுறைகளிலும் நல்ல அறிவு தேவை. அவ்விதிமுறைகள் வேதத்தை நாம் தவறான விதத்தில் விளங்கிக் கொள்வதிலும், வியாக்கியானம் செய்வதிலும் இருந்து நம்மைக் காக்கும். இச்சாதனங்களை முறையாகப் பயன்படுத்தி வேதத்தை விளங்கிக் கொள்வதில் நாம் நல்ல தேர்ச்சி அடைவது முக்கியம். ஏனோதானோவென்று வேதப்பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்க முயல்வதை இது தடை செய்யும். கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் தவறானவிதத்தில் விளக்கம் கொடுக்க முயல்வது ஆபத்தான காரியம்.
3. நல்ல போதகர்களின் பிரசங்கங்களைப் போதகர்கள் வாசிக்க வேண்டும். ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரின் பிரசங்க நூல்களைப் பெற்று வாசிக்க வேண்டும். இன்று நூல்கள் மட்டுமல்லாது ஒலி நாடாக்களிலும் இவ்வாறாகப் பிரசங்கங்கள் வெளிவருகின்றன. முக்கியமாக அமெரிக்காவில் திரித்துவ பாப்திஸ்து சபைப் போதகரான அல்பர்ட் என். மார்டினுடைய பிரசங்கங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன. பாஸ்டர் மார்டின் கர்த்தரால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த சீர்திருத்த போதகரும், பிரசங்கியும் ஆவார். இவரது பிரசங்கங்களைக் கேட்பது இளம் பிரசங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
வியாக்கியானப் பிரசங்கத்தை எங்கு? எப்படி ஆரம்பிப்பது?
இளம் போதகர்கள் ஆரம்பத்தில் உபாகமம், யோபு போன்ற நூல்களில் பிரசங்கம் செய்ய ஆரம்பிக்காமல் யோனா, ரூத் போன்ற சிறு நூல்களைத் தொடர்ச்சியாக வாரா வாரம் பிரசங்கிக்க முயல வேண்டும். யாக்கோபு, முதலாம் யோவான் போன்றவற்றில் ஆரம்பிப்பதும் நல்லது. இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் இன்னுமொரு உதாரணம். இதைத் தொடர்ந்து வாராவாரம் பிரசங்கிப்பது நல்ல பலன் தரும்.
முடிந்தால் லொயிட் ஜோன்ஸ் இதில் பிரசங்கித்த இரண்டுபாக நூல்களையும் வாங்கிப் படித்துப்பயன் பெறலாம். இவற்றில் பிரசங்கம் செய்து தேர்ச்சி பெற்ற பின்னர் ஏனைய நூல்களில் முக்கியமான பகுதிகளில் பிரசங்கம் செய்ய முயற்சிக்கலாம்.
வியாக்கியானப் பிரசங்கம் செய்யும்போது கேட்போர் ஆர்வத்துடன் கேட்கும் விதத்தில் ஒவ்வொரு பிரசங்கமும் அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது, கேட்போர் எங்கு ஆரம்பித்தோம் என்று மறந்துவிடாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
எனவே, வியாக்கியானப் பிரசங்கங்களை நாம் மிகவும் நீண்டதாக பலவருடங்களுக்கு இழுத்தடிக்காமல் இருப்பது நல்லது. இவ்வாறு யோபுவை நாற்பது வருடங்களுக்குப் பிரசங்கம் செய்த ஒரு போதகர் தனது ஆத்துமாக்களை சபையிலிருந்து இழக்க நேரிட்டது. இந்நிலைமை நமக்கு வரக்கூடாது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum