- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
இந்திய பன்னாட்டு எண் முறையில் படிப்பது எப்படி?
Wed Dec 14, 2016 9:37 am
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: இந்திய பன்னாட்டு எண் முறையில் படிப்பது எப்படி?
Wed Dec 14, 2016 9:59 am
8608670365
இந்த எண்ணை எழுதும் முறை அல்லது படிக்கும் முறை:
சூத்திரம்:
322 - ஆலகோ - இந்திய எண் முறை
333 - ஆமிபி - பன்னாட்டு எண் முறை
இந்திய எண் முறையில் எழுதுவது எப்படி?
322 என்ற வரிசைப்படி எண்களை பிரித்துக் கொள்ள வேண்டும். கடைசி 3 எண்களை விட்டுவிட்டு அடுத்துள்ள எண்களை இரண்டிரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும். கீழே பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
860,86,70,365
கடைசியில் உள்ள மூன்று எண்களை தவிர்த்து, அடுத்துள்ள எண்களின் மேல் வரிசைப்படியே "ஆலகோ" என எழுதி கொள்ளுங்கள். ஆலகோ என்றால் - ஆயிரம், லட்சம், கோடி என்று பொருள்.
இப்பொழுது சேர்த்து படியுங்கள்:
860 கோடியே 86 லட்சத்து 70 ஆயிரத்து 365
பன்னாட்டு முறையில் எழுதும் முறை:
333 என்ற வரிசைப்படி எண்களை பிரித்துக் கொள்ள வேண்டும். கடைசியிலிருந்து எண்களை மூன்று மூன்றாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
8,608,670,365
பிரித்த பின்னர், கடைசியில் உள்ள மூன்று எண்களை விட்டுவிட்டு, அடுத்துள்ள எண்களின்மேல் ஆமிபி - என எழுதிக் கொள்ள வேண்டும்.
"ஆமிபி" - என்றால் - ஆயிரம், மில்லியன், பில்லியன் என்று பொருள்.
8 பில்லியன் 608 மில்லியன் 67 ஆயிரத்து 365
Permissions in this forum:
You cannot reply to topics in this forum