இந்த மிஷனரிகள் எப்போது மரித்தார்கள்?
Mon Mar 25, 2013 11:44 am
"இருண்ட
கண்டம் என அழைக்கப்படும் ஆப்ரிக்கா கண்டம் மிஷனரிகளுக்கும் இருண்ட
கண்டமாகவே அமைந்தது. இருளில் இருப்போருக்கு ஒளியை கொண்டு சென்ற
வெளிச்சங்கள் அங்கு தீ-பந்தங்களை உருவாக்கி அணைந்து கொண்டன.
அந்நாட்களில் ஆப்ரிக்காவின் கடற்கரைக்கு வந்திறங்கிய மிஷரிகளின் சராசரி வாழ்நாள்-எதிபார்ப்பு(Life Expectancy)
இரண்டு ஆண்டுகளே. ஆப்ரிக்காவில் பரவிக் கிடந்த வியாதிகள் அங்கு செல்பவரை
ஓரிரு நாட்களிலேயே தொற்றிக் கொள்ளும். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள்
உயிரையே குடித்துவிடும். இது அந்நாட்களில் உலகறிந்த செய்தி.
ஆகவே, ஆப்ரிக்காவுக்கு தங்களை மிஷனரிகளாக ஒப்புக்கொடுத்த வீரர்கள் தங்கள்
உடைமைகளை எடுத்து வர சரக்கு பெட்டிகளை பயன்படுத்தமாட்டார்கள். மிஷனரிகள்
தங்கள் சொந்த நாட்டிலிருந்து வரும் போது சவ-பெட்டிகளில் இரண்டு
ஆண்டுகளுக்கு தேவையான உடைமைகளை எடுத்து வருவர்.
ஏனென்றால் இரண்டு
ஆண்டுகளின் முடிவில் தங்கள் சரீரத்தை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல இந்த
சவப்பெட்டி உதவி செய்யும் என்றே சவபெட்டியில் தங்கள் உடைமைகளை எடுத்து
வந்தனர்."
என்று சில இளம்பிள்ளைகளுக்கு மிஷரிகளின் வரலாறு குறித்து விவரித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அங்கிருந்த ஒரு தங்கை , "இந்த மிஷனரிகள் எப்போது மரித்தார்கள்?" என்று என்னிடம் கேட்டாள்.
உடனே ஆவியானவர் உள்ளத்தில் ஒரு பதிலை கொடுத்தார். அதை அவர்களோடு பகிர்ந்து
ஜெபிக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர முடிந்தது,
அந்த பதில்,
"இவர்கள் தங்கள் நாட்டிலிருந்து கிளம்பும் முன்னே மரித்துவிட்டார்கள்."
John 12: 23-26
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும்,
செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை
இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய
ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால்
என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும்
இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர்
கனம்பண்ணுவார்.
இப்போது உங்களை நீங்களே நிதானித்து பாருங்களேன்?
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum