- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
விடையளிப்பது எப்போது..?
Sat Dec 03, 2016 8:29 am
உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு பிறகு லட்சக்கணக்கில் கையில் ரொக்கமாக வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற என்ன செய்தார்கள்? எப்படி அந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்? என்ற மர்மத்திற்கு தினம் தினம் அதிரடி அறிவிக்கையை வெளியிடும் அதிரடி அருண் ஜேட்லி, பதில் அளிக்கப்போவது எப்போது என்று சமூக ஊடகங்களில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து வருகின்றன.
கடந்த மாதம் 8-ஆம் தேதி இரவு உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் முன்பும் கால் கடுக்க காத்திருந்து தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியும் டெபாசிட் செய்தும் வருகிறார்கள்.
ஆனால், கால் கடும்பும் காத்திருப்பும் இல்லாமல் மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களிடம் இருந்த பல லட்ச ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றவும் அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி அந்த பணத்தை மாற்றினார்கள்? என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.
2016 மார்ச் மாதம் காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் தகவல்களின்படி, தற்போது பதவியில் இருக்கும் 76 அமைச்சர்களில் 40 பேர் தங்களிடம் உள்ள ரொக்கப்பணம் எவ்வளவு என்று 2016 மார்ச் மாதம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 40 மத்திய அமைச்சர்களிடம் அதிக அளவில் ரொக்க கையிருப்பில் உள்ள தெரியவந்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்கம் விவரம்:
ரூ.500, ரூ.1000 நடவடிக்கை குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ரூ.65 லட்சத்து 29 ஆயிரத்து 400 ஆயிரம் ரொக்கமாக வைத்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.
2. இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் (சுயேச்சை) - ரூ.22 லட்சம்
3. இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹி - ரூ.10 லட்சத்துக்கு அதிகம்
4. பிரதமர் நரேந்திர மோடி - ரூ.89,700 ஆயிரம்
5. 23 மத்திய அமைச்சர்கள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
6. 15 மத்திய அமைச்சர்களிடம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற மத்திய அமைச்சர்களில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் இன்னமும் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அளிக்கவில்லை.
மேற்கண்ட பட்டியல் விவரம் தெரிவிப்பது என்னவென்றால், ரொக்கமற்ற சமுதாயம் அமைப்போம் என்ற மோடியின் உற்சாகத்தை அமைச்சர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
உயர் மதிப்புடைய நோட்டுகள் நடவடிக்கையால் கடந்த 22 நாட்களாக, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு தொழிலதிபர்களோ, கறுப்புப் பண முதலைகளோ, அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ நிற்கவில்லை. ஆனால், பொது மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் முன்பு கால் கடுக்க காத்திருக்கும் நிலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
21-வது நூற்றாண்டின் இந்தியா ஊழல் இல்லாத இந்தியாவாக இருக்க வேண்டும் என்றால், மொபைல் வங்கி, மொபைல் வாலட்ஸ், ஆன் லைன் வர்த்தகம், ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறுவோம் என்று கிராமவாசிகளிடம் சென்று பிரதமரும், அருண் ஜேட்லியும் அறைகூவல் விட்டு வரும் நிலையில், அருண் ஜேட்லி உட்பட அமைச்சர்கள் கையில் பெரிய அளவில் வைத்துள்ள ரூபாயை எப்படி மாற்றினார்கள்? அல்லது டெபாசிட் செய்தார்கள்? என்பது மர்மமாகவே இருக்கிறது.
இதற்கெல்லாம் தினம் தினம் அதிரடி அறிக்கைவிடும் அருண் ஜேட்லி விடையளிப்பது எப்போது..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum