தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்... Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்... Empty மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்...

Mon Nov 28, 2016 2:40 pm
மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்... 15170977_1888636044697623_4156381422323236381_n


மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்...


அதிகமதிகம் பகிருங்கள் உங்கள் முகநூல் சுவரில் பதியுங்கள் தகவல் மக்களை சென்றடையட்டும்....

திரு அரவிந்த் கெஜ்ரிவால், 17 நவம்பர் 2016 அன்று, டில்லி ஆசாத்பூர் மண்டி ஜனசபையில், பொது கூட்டத்தில் பேசியதின் சுருக்கமான தமிழாக்கம்.

பிரதமருக்கும் எங்களுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தது, உள்ளது. ஆனால் அவர் உன்னதமான எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும், முதலில் ஆதரவு தெரிவித்து நாங்கள் உடன்பட்டோம். சொச்ச பாரத் எனும் பாரதத்தை சுத்தப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டதும், நாங்கள் தொடைப்பங்களுடன் தெருவில் இறங்கினோம்.

அதே போன்று, யோகா ஆரோக்கியத்திற்கு நல்லது என்றதும், நாங்கள் முழு மனதுடன் அதற்காக பிரச்சாரம் செய்தோம்.
பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தபோது, நான் பெரிய சல்யூட் என்று பெருமையுடன் கூறினேன். அதை திரித்து குழப்பி, பலர், பல ஊடகங்கள் வேறுவிதமாக பிரச்சாரம் செய்தது வேதனைக்குரியது.

ஊழலை, கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் செல்லாது என்று கூறிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியது என்ன கணக்கு என்று பொருளாதார விஞ்ஞானிகளால் கூட கூற முடியவில்லை.

லஞ்சம் கொடுப்பதற்கும், கருப்பு பணமாக பதுக்குவதற்கும் 2000 ரூபாயாக வசதிபடுத்தி கொடுத்துவிட்டு கருப்பு பணம் ஒழியும் என்பது, வருமானவரி துறையில் கமிஷனராக இருந்த என் அறிவுக்கு புலப்படாத விஷயம்.

நோட்டுகளை புதுப்பித்து, ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிக்க போவதாக, தேசத்தின் மிக பெரிய ஊழல் திட்டமிடப்பட்டிருக்கிறது, மக்களே, நான் சொல்லும் விசயத்தை அனைவருடன் பகிருங்கள். 

வங்கிகள் மிக பெரும் பணமுதலைகளுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்வரை கடன் கொடுத்துள்ளது. RBIயின், CAGயின் அறிக்கைபடி, இந்த 8 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் என வங்கிகள் அறிவித்திருக்கிறது. மோதி அவர்கள், இந்த 8 லட்சம் கோடி கடனில் ஒரு லட்சத்து பதினான்கு ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துவிட்டார்.

நீங்கள் விஜய் மல்லையாவை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இவரது தொழில் சாராயம் காய்ச்சுவது. அவருக்கு நிறைய வயதாகிவிட்டது, ஆனால் சிறு வயது பெண்களுடன் உலகம் சுற்றி கொண்டிருக்கிறார். அவர்மீது 8000 கோடி ரூபாய் கடன் உள்ளது. யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக அவரை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அச்சமயம், பத்திரிக்கைகளுக்கு, ஊடகங்களுக்கு கூட தெரியாது.

இந்த 8 லட்சம் கோடி கடனில் ஒரு லட்சத்து பதினான்கு ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தாகிவிட்டது. இனி மீதம் உள்ள கோடிகளை தள்ளுபடி செய்ய மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டது தான், இந்த 500, 1000 ரூபாய் செல்லாதாக்கும் திட்டம். 
சில ஆயிரம் கோடிகள் மக்களின் பணம் வங்கியில் சேர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முன்றைய நாள் ஸ்டேட் பேங்க் 8000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கிறது. இதை உறுதியான ஆதாரத்துடன் கூறமுடியும்.

நீங்கள் இரவும் பகலும் மழையிலும், வெய்யிலிலும் கால் கடுக்க நின்று நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை செலுத்தி, மாற்றி கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு என்ன பலன் என்பது உறுதியில்லை, ஆனால், பெருமுதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி ஆகும்.

மோதி அவர்கள் இந்த கடன் தள்ளுபடியை, தன் நண்பர்களுக்காக செயகிறார் என்று பலர் கூறுகிறார்கள். உடன் பிறந்தவர்களுக்கே எதுவும் செய்யாதபோது, இவர்களின் நட்பு என்ன அவ்வளவு இருக்கமானதா? சுயநலமற்றதா? எதற்காக இந்த நட்பு அர்ப்பணிப்பு? காரணம் இருக்கிறது, மக்களே!

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், விவாதங்கள் இருந்த போதிலும், மோதி அவர்களை நேர்மையானவர், தூய்மையானவர் என்று இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன்.

அனால் இரு நாட்களுக்கு முன்பு எனக்கு வந்த தஸ்தாவேஜுகளை படித்தவுடன், பிரமித்துவிட்டேன். அதிர்ச்சிக்குள்ளானேன். நம்ப முடியாத இந்த விவரத்தை வருமான வரித்துறையின் அலுவலகத்தில் இருந்து வந்த காகிதங்கள் வெளிப்படுத்தியது. எனக்கு வருமான வரித்துறையின், பைனான்ஸ் மினிஸ்டரியில் முதன்மை உயரதிகாரி, நான் வருமானவரி துறையில் கமிஷனராக இருந்த காலத்தில் இருந்தே நண்பர், இந்த காகிதங்களை அனுப்பி இருக்கிறார்.


அந்த ஆவணங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

பிட்லா நிறுவனத்தை பற்றி தெரியுமா, உங்களுக்கு? 

15 அக்டோபர் 2013 அன்று, இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கணினிகளில் இருந்து உருவப்பட்ட விவரங்களில் கண்டெடுக்கப்பட்ட விபரம் இது.

"குஜராத் முதலமைச்சர் - 25 கோடி. 13 கோடி கொடுக்க பட்டுவிட்டது. மீதம் 12 கோடிதரவேண்டி உள்ளது." இதற்கு என்ன அர்த்தம். அவருக்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? நடக்கவில்லை, காரணம், அவர் முதலமைச்சராக இருந்தார்.

நேற்று சில செய்திதாள்களில் 22 நவம்பர் 2014 அன்று சகாரா நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர் என வெளியாகியது. இந்த நிறுவனத்தின் ஒரு அறையில் 130 கோடி கைப்பற்றப்பட்டது. அதே இடத்தில வருமான வரித்துறை கமிஷனரின் கையெழுத்தும் முத்திரையும் இருந்த சில ஆவணங்கள் கிடைத்தது. ( அனைவருக்கு காட்டுகிறார்) அதில் -

30 அக்டோபர் 2013 அன்று 2.5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் ஜெய்ஸ்வால் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. 

12 நவம்பர் 2013 அன்று 5.1 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் ஜெய்ஸ்வால் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

27 நவம்பர் 2013 அன்று 2 .5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் ஜெய்ஸ்வால் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

29 நவம்பர் 2013 அன்று 5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் சச்சின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

6 டிசம்பர் 2013 அன்று 5 கோடி ரூ மோதி அவர்களுக்கு அகமதாபாத், குஜராத்தில் சச்சின் என்பவரின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ 40 கோடி மோதி அவர்களுக்கு கொடுக்க பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ளது, உண்மையா இல்லையா என்று இவைகளை ஆய்வு செய்யவேண்டுமா, வேண்டாமா?

இன்று எங்களை வரிசையில் நிற்க வைத்திருக்கிறீர்களே, அதானி அம்பானி போன்றவர்களின் நிறுவனம், இல்லங்களில் கருப்பு பணம் சோதனை செய்தீர்களா? 

சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்தீர்களா?

மனதில் சந்தேகம் எழுகிறது. இந்த பணம் கொழுத்தவர்களின் நலனுக்காக நம்மிடம் பணம் பிடுங்க படுகிறதா, அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு சதி நடக்கிறதா, அதற்காக கோடிகள் கைமாறியதா என சந்தேகம் எழுகிறது.

துரோகம் இழைக்கப்படுகிறது, இந்த நாட்டுக்கு துரோகம் செய்யப்படுகிறது.

முன்றைய தினம் பிஜேபியின் நெருங்கிய நண்பர் ஜனார்த்தன ரெட்டியின் குடும்ப திருமணத்திற்கு 500 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டதே, அவருக்கு மட்டும் பணம் எப்படி கைக்கு வந்தது? அவருக்கு அவ்வளவு இரண்டாயிரம் நோட்டுகளை யார் கொடுத்தது? அவர் என்ன வரிசையில் நின்றா பணம் பெற்றார்?

2.5 லட்சத்திற்கு மேல் பணம் வைப்பு செய்தால் வரி விதிக்கப்படும் என மிரட்டுகிறீர்களே. மகள்கள் திருமணத்திற்கு 2.5 லட்சத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆணை இடுகிறீர்களே!

இன்றைய காலகட்டத்தில் 2.5 லட்சத்திற்கு திருமணம் முடிக்க முடியுமா? சில தினங்களுக்கு முன்பு அருண் ஜெட்லீ தன் மகளுக்கு திருமணம் முடித்தார், அவரென்ன 2.5 லட்சத்தில் திருமணம் முடித்தாரா? நீங்கள் உங்கள் மகளின் திருமணத்தை 2.5 லட்சத்திற்குள் முடித்து காட்டுங்கள், பார்ப்போம்?

வரிசையில் நின்று பணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், பெற்று கொள்ளுங்கள் என்று எங்களை முட்டாளாக்க பார்க்கிறீர்களா ? 


எங்களை வரிசையில் கையேந்த வைத்துவிட்டு நீங்கள் இந்த கருப்பு பண திருடர்களுடன் கொஞ்சி குலாவுவீர்களா?

இது நடக்கா கூடாது, நடக்க விடமாட்டோம். 

52 பேர் இதுவரை பணம் கைக்கு வராத காரணத்தினால் உயிர் இழந்து இருக்கிறார்கள், இதற்கு யார் பொறுப்பு?
மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள், 

மூன்று நாட்களுக்குள் இதை திரும்ப பெறுங்கள், இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும்...


நன்றி: முகநூல்: Sarkkar Muhammed


இதற்குரிய கமெண்ட்ஸ்:


ஹஸன் ஷேக் :    மோடியின் மாபெரும் துரோகம் !

கருப்பு பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுவது பங்கு சந்தையில் தான் என்பது மக்களும், அரசும் நன்கு அறிந்தது. News 7 விவாதத்தில் ஒரு பொருளாதார நிபுணர் சொல்கிறார்.. "ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் பங்குகளை விற்று வருகின்றனர். கடந்த எட்டு நாட்களில் மட்டும் 18,000 கோடி பங்குகள் விற்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களை தேசத்துக்காக பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அரசு, அரசே ஒப்புக்கொண்ட கருப்பு பண முதலீடுகள் (p forms) வெளியேற அரசு எப்படி அனுமதிக்கிறது ? அவர்களை பொறுத்து கொள்ள சொல்ல அரசுக்கு என்ன தயக்கம் ?" 

இதை விட பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த 18,000 கோடி பங்குகளை 80% வாங்கி முதலீட்டாளர்களையும், கார்ப்ரேட்களையும் காப்பாற்றியுள்ளது வேறு யாருமல்ல, இன்று, உழைத்த 2000 ரூபாய்க்கான Q வில் நிற்கும் சாமானிய இந்தியனின் வருவாயில் இயங்கும் Lic தான்.. 

மோடியின் அறிவிப்பு உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்று நம்புபவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்.. மோடி எது செய்தாலும் கண்மூடி எதிர்க்கிறவர்களுக்கு இது சந்தோசத்தை கொடுக்கலாம், மோடி பிறந்ததே இந்தியாவை ரட்சிக்க தான் என்னும் பக்தர்களுக்கு இது ஒரு சாதாரண குற்றச்சாட்டாக தெரியலாம்.. ஆனால், நாட்டின் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது மாபெரும் துரோகமே தவிர வேறொன்றுமில்லை..

- Akila Ramakrishnan


மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்... 15253500_1125743294207437_413853213789910530_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum