- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
வதந்தி பற்றிய மிக முக்கியமான தேசபக்திக் குறிப்பு
Tue Nov 22, 2016 8:21 pm
வதந்தி பற்றிய மிக முக்கியமான தேசபக்திக் குறிப்பு:
waiver என்றால், கடன் தள்ளுபடி.
write off என்றால், கணக்கிலிருந்து கடனை நீக்குதல் (போக்கெழுதுதல்).
நீங்கள் உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று,
‘நான் வாங்கிய கடனை write off மட்டும் செய்யுங்கள். waiver செய்ய வேண்டாம்’ என்று தேசபக்தியுடன் கூறுங்கள். மேலாளரும் தேசபக்தியுடன் write off மட்டும் செய்வார்.
ஒருவேளை, அந்த மேலாளர், ' உன் கடனை write off’ செய்துவிட்டால், நீ கடனைத் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லையே... கணக்கிலிருந்தே உன் கடனை நான் நீக்கியதாக அர்த்தமாகுமே?’ என்று கேட்டால்,
அவர் தேசபக்தி இல்லாதவர், வதந்திகளைப் பரப்புபவர். அவர் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, அஜர்பைஜானுடன் கள்ள உறவு கொண்டவர்.
தேசபக்தர் விஜய் மல்லையாவின் 1.201 கோடி ரூபாய், மற்ற பிற தேசபக்தர்களின் 6,000 கோடி ரூபாய் ஆகியவை எல்லாம் write off மட்டும் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஸ்டேட் வங்கி தனது கணக்கிலிருந்து இவர்கள் கடன்களை நீக்கிவிட்டது.
அதனால், கணக்கில் இல்லையென்றாலும் அவரிடம் கடன் தொகையை தேசபக்தி அமைச்சர்கள் கேட்டு வாங்கிவிடுவார்கள்.
இதுதான் ஒரே உண்மை.
இதற்கு மாறாக யாராவது பேசினால் அது வதந்தி என்றறிக.
Thabks: Pathy Lakshman - facebook
Permissions in this forum:
You cannot reply to topics in this forum