- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
வெத்துப்பேச்சு வீணாபோச்சு...
Tue Nov 15, 2016 2:24 pm
பூமியில் பேசிய வார்த்தைகளை
கணக்கொப்புவி என்றார் தேவன்
இராஜ்ஜியம் கட்ட பேஸ்புக் போனேன்
பேஜ் உருவாக்கி சாதனை படைத்தேன்
குரூப் உருவாக்கி பேசி தீர்த்தேன்
எனக்கும் அறிவுண்டு, நானும் வேதம்
படித்து, கரைத்து குடித்தவன் என்றேன்
என் வார்த்தைகள் உயர்ந்த தரமென்றேன்
நாவே, நாவே !! உன் பெருமைகள்
நரகத்தின் அக்கினியை விட கொடுமை
தட்டச்சு செய்யும் விரல்களே உன்னில்
ஒட்டியிராத பாவம் ஒன்றும் இல்லை
அனைத்தையும் செய்தேன், நானே செய்தேன்
தேவனுக்கு விரோதமாக செய்தேன்
என் பெருமை அவர் கரங்களில் ஆணிகளாய்
என் மேட்டின்மை அவர் கால்களின் காயங்களாய்
என் மேல் நானே ஒரு மகுடம் வைக்க
நாள் தோறும் போராடினேன், முயன்று தவித்தேன்
அவரோ மூன்றே வருடம் மட்டும் பாடுபட்டார்
முள்பாகை சுமந்தார், இராஜமுடி தரித்தார்
உடனே சிங்காசனத்துக்கு உயர்த்தப்பட்டார்
என் தேவனாகிய நீதிபரர் என் பாவங்களை
சுமந்தார், நானோ மற்றவரின் பாவத்தை
நியாயம் தீர்த்து எனக்கு நானே தண்டனைகளை
இயற்றுகிறேன், மற்றவர்களை நான் தீர்க்கும்
விதமே நானும் அவரால் தீர்க்கப்படுவேன்
அவர் நேசித்தது போல நான் நேசிக்கவேண்டும்
அவர் அனுபவித்த சிலுவை எனக்கும்வேண்டும்
என் தேவன் நல்லவர், நானோ பொல்லாதவன்
என் தேவன் நீதிபரர், நானோ அவருடைய
வழிகளை அறியாதவன், அதில் தரிக்காதவன்,
என் தேவனே என்னை கட்டி இழும்,
மனந்திரும்புதல் உம்மிடத்தில் உண்டு
நீதிமான் ஒருவனுமில்லை, உம்மால் நாங்கள்
நீதிக்குட்படுவதால், நீர் மகிமைப்படுவீர் !!
கணக்கொப்புவி என்றார் தேவன்
இராஜ்ஜியம் கட்ட பேஸ்புக் போனேன்
பேஜ் உருவாக்கி சாதனை படைத்தேன்
குரூப் உருவாக்கி பேசி தீர்த்தேன்
எனக்கும் அறிவுண்டு, நானும் வேதம்
படித்து, கரைத்து குடித்தவன் என்றேன்
என் வார்த்தைகள் உயர்ந்த தரமென்றேன்
நாவே, நாவே !! உன் பெருமைகள்
நரகத்தின் அக்கினியை விட கொடுமை
தட்டச்சு செய்யும் விரல்களே உன்னில்
ஒட்டியிராத பாவம் ஒன்றும் இல்லை
அனைத்தையும் செய்தேன், நானே செய்தேன்
தேவனுக்கு விரோதமாக செய்தேன்
என் பெருமை அவர் கரங்களில் ஆணிகளாய்
என் மேட்டின்மை அவர் கால்களின் காயங்களாய்
என் மேல் நானே ஒரு மகுடம் வைக்க
நாள் தோறும் போராடினேன், முயன்று தவித்தேன்
அவரோ மூன்றே வருடம் மட்டும் பாடுபட்டார்
முள்பாகை சுமந்தார், இராஜமுடி தரித்தார்
உடனே சிங்காசனத்துக்கு உயர்த்தப்பட்டார்
என் தேவனாகிய நீதிபரர் என் பாவங்களை
சுமந்தார், நானோ மற்றவரின் பாவத்தை
நியாயம் தீர்த்து எனக்கு நானே தண்டனைகளை
இயற்றுகிறேன், மற்றவர்களை நான் தீர்க்கும்
விதமே நானும் அவரால் தீர்க்கப்படுவேன்
அவர் நேசித்தது போல நான் நேசிக்கவேண்டும்
அவர் அனுபவித்த சிலுவை எனக்கும்வேண்டும்
என் தேவன் நல்லவர், நானோ பொல்லாதவன்
என் தேவன் நீதிபரர், நானோ அவருடைய
வழிகளை அறியாதவன், அதில் தரிக்காதவன்,
என் தேவனே என்னை கட்டி இழும்,
மனந்திரும்புதல் உம்மிடத்தில் உண்டு
நீதிமான் ஒருவனுமில்லை, உம்மால் நாங்கள்
நீதிக்குட்படுவதால், நீர் மகிமைப்படுவீர் !!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum