பூசணி ரசமலாய்
Mon Oct 31, 2016 7:50 pm
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்,
பால் - 6 கப்,
ரவை - 4 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - அரை கப்,
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்,
பன்னீர் - சில துளிகள்,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1.பூசணிக்காயை தோல் நீக்கி வேகவைத்து, தண்ணீரை வடித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
2.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
3.சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.
4.கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
5.ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய் விழுதைப் போட்டு தேங்காய்த்துருவல், ரவை சேர்த்துக் கலக்கவும்.
6.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூசணிக்காய் கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்
. 7.பொரித்த உருண்டைகளை பாலில் போட்டு ஊற வைக்கவும். அதன் மீது பன்னீரைத் தெளித்து விடவும். குளிர வைத்துப் பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum