ருசியான - "ரச குலா "
Mon Oct 31, 2016 7:40 pm
தேவையான பொருட்கள்
பால் : 1 லிட்டர்
சக்கரை : 1 கப்
தண்ணீர் : 3½ கப்
எலுமிச்சை சாறு : 2 டீஸ்பூன்
செய்முறை :
1.முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கொஞ்சம் ஐஸ் வாட்டர் எடுத்து வைக்கவும்
2. பின் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்...
3. பால் பொங்கி வரும் பொது எலுமிச்சை சாறை விட்டு அடுப்பை அணைக்கவும்...
4.பால் நன்கு திரிந்து வீடும் அதை சுத்தமான துணி கொண்டு பன்னீரை தனியே பிரிக்கவும்...
5. நீர் வடிந்ததும்.. பன்னீர் மூட்டையை அப்படியே ஐஸ் வாட்டரில் முக்கி மூட்டையோடு பிசைந்து கழுவவும்... இப்படி செய்வது அதில் இல்ல எலுமிச்சை சுவையை எடுக்க..
6.நன்கு பிடிந்து கழுவிய பின் மூட்டையை இறுகி பிழிந்து அதில் உள்ள நீரை எடுத்து விட்டு மிச்சம் உள்ள நீரை எடுக்க பன்னீர் மேல் வேய்ட் வைக்கவும் ½ மணி நேரம் போதும்..
7.இப்போது நீர்வடிந்த பன்னீரை நன்கு உதிர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசையவும்...
8.நன்றாக இழைத்து பிசையவும்... பின் தேவையான சைசுக்கு உருண்டையாக உருட்டி வைக்கவும்.. பாகில் போட்டால் முன்று மடங்கு பெரியதாகும்
9. ஒரு வாய் ஆகலமான பாத்திரத்தில் ஒரு கப் சக்கரைக்கு 3 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்..
10.கொத்தி வந்ததும் மெதுவாக உருண்டைகளை போடவும்... கவனம் அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்...
11.எல்லா உருண்டைகளை போட்ட பின் பாத்திரத்தை மூடவும்.. கொஞ்சத்தில் கொதிக்க ஆரம்பிக்கும்..
12.இப்போது ஒரு ஸ்பூன் அளவுக்கு நீர் விடவும்.. கொதிப்பது அடங்க வேண்டும் ..
13.மீண்டும் கொதிக்க துவங்கும்போது திரும்ப கொஞ்சம் நீர் சேர்க்கவும்...
14.இப்படி நான்கு முறை செய்யவும் இது ரசகுலாவை சாப்ட்டாகவும்... உடையாமலும் இருக்க உதவும்...
15.அதன் பின் 20 அல்லது 25 நிமிடம் கொதிக்க விடவும்... அடுப்பு சிம்மிலே இருக்க வேண்டும் தீயை அதிகப்படுத்த கூடாது...
16.ஆறியதும் நான்கு மணி நேரம் பாகில் ரசகுலா ஊற வேண்டும் பின் சாப்பிட்ட... சுவை குமுன்னு இருக்கும்... செய்வது சுலபம்
17. ரசகுலாவை உடைத்தால் நடுப்புறம் மென்மையாக இருக்க வேணும்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum