மலாய் ரோல்
Mon Oct 31, 2016 7:31 pm
தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர்
மைதா மாவு - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுக்கவும்)
சர்க்கரை - 300 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி
மில்க்மெய்ட் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பிஸ்தா - சிறிதளவு (பொடியாக சீவவும்)
செய்முறை:
1.கால் லிட்டர் பாலை தனியே எடுத்து வைக்கவும்.
2.மீதம் உள்ள முக்கால் லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து இதில் ஒரு கரண்டி பால் எடுத்து, எலுமிச்சைச் சாறை விடவும்.
3. பால் திரிந்ததும் அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
4. பால் முழுவதும் திரிந்ததும் இதனை வடிகட்டி தண்ணீரில் நன்கு அலசி வைக்கவும்.
5.இதுதான் பனீர். மீதம் இருக்கும் கால் லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அதில் ஃப்ரெஷ் க்ரீம் மில்க்மெய்ட், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
6.கலவை பாதியாக குறைந்து திக்காக வரும் போது ஆறவிடவும். சர்க்கரையை சம அளவு தண்ணீர் ஊற்றி பாகாக காய்ச்சவும்.
7.இனி பனீருடன் மைதா மாவைச் சேர்த்து இழுத்து இழுத்து சப்பாத்திப் பதத்துக்குப் பிசையவும்.
8. இவற்றை நீளமான உருண்டையாக உருட்டி, சர்க்கரைப் பாகை அடுப்பில் ஏற்றி, தீயை சிம்மில் வைத்து உருண்டைகளைப் போடவும்.
9.பதினைந்து நிமிடம் கழித்து, தீயை அணைத்து உருண்டைகளை மட்டும் எடுத்து ரெடி செய்து வைத்திருக்கும் பால் கலவையில் சேர்த்து ஊற வைத்து பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum