ஜவ்வரிசி வடை
Mon Oct 31, 2016 7:26 pm
தேவையான பொருட்கள்:-
ஜவ்வரிசி - 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
வறுத்து பொடித்த கடலை - 6 tsp
பொடியாக நறுக்கிய இஞ்சி & பூண்டு - 1 tsp
சர்க்கரை - 1/2 tsp
பச்சை மிளகாய் - 7
பூண்டு விழுது - 1 1/2 Tbsp
கொத்தமல்லி இலை
உப்பு - தேவைக்கேற்ப
லெமன் ஜூஸ் - 1 tsp
செய்முறை:-
1.முதலில் ஜவ்வரிசியை குறைந்தது 5 மணிநேரம் அல்லது இரவு முழுக்க ஊறவைத்து, நீரை வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.
2.இதில் உருளைக் கிழங்கு, கடலை, சர்க்கரை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பூண்டு விழுது,
,லெமன் ஜூஸ், கொத்தமல்லி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
3.பின்பு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, மசால் வடையை போலவே ரவுண்டாக தட்டி, எண்ணையில் பொறித்து எடுக்கவும்...!
4.தேங்காய் சட்னியுடன் சாப்பிட தேவாமிர்தம் தான்....!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum