கொங்கு கோவை மைசூர்பாக்
Mon Oct 31, 2016 7:21 pm
தேவையான பொருட்கள்
கடலை மாவு : 1 கப்
சர்க்கரை : 1 ½ கப்
நெய் : ¾ கப்
வெண்ணை : ¼ கப்
ஏலக்காய் தூள் : ஒரு சிட்டிகை
மரசெக்கு கடலை எண்ணெய் : 1 கப்
செய்முறை
1. முதலில் கடலை மாவை நன்கு பச்சை வாசனை போக... கொஞ்சம் சிவக்கும் வரை வறுக்கவும்...
2.வருத்த மாவை நன்கு சலித்து ஏலக்காய் போடி கலந்து வைக்கவும்...
3.ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய்,வெண்ணை கலந்து கட்டி இல்லாமல் உருக்கி வைத்து கொள்ளவும்...
4. வேறு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எடுத்து... உருக்கிய எண்ணையில் கொஞ்சம் எடுத்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்..
5.பின் வாணலில் சர்க்கரை போட்டு சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்... பாகு கம்பி பதம் வர காத்திருக்க தேவை இல்லை.சர்க்கரை பாகு கை ஓட்டும் பிசுக்கு பதம் இருந்தாலே போதும்...
6.மெல்ல கரைத்து வைத்த கடலைமாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பாகில் சேர்த்து கிண்டவும்... ஓரம் நுரை போல் பொரிந்து வரும் அப்போ மேல மீதம் உள்ள நெய்யில் கொஞ்சம் சேர்த்து கிண்டவும்...
7.திரும்பவும் நுரை போல் பொரித்து வரும் மேலும் மீதம் இருக்கும் எண்ணையில் சிறிது விட்டு கிண்டவும்... இப்படி நெய் முழுக்க கொஞ்சம் கொஞ்சம கலந்து கிண்டவும்... கடைசியில் நுரை போல பொரித்து வந்தது கொஞ்சம் சுருள ஆரம்பிக்கும்...
8.நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறியதும் வெட்டுங்கள் செய்வது மிகவும் சுலபம். சக்கரை கம்மியா இருப்பதால் இறுக வாய்ப்பு இல்லை. நெய் இருப்பதால் கரெக்டாக செட் ஆகும்... திகட்டவும் செய்யாது. எப்படி சொதப்பி செய்தாலும் கரெக்டா வரும்.ட்ரை பண்ணி பாருங்க.
Re: கொங்கு கோவை மைசூர்பாக்
Mon Oct 31, 2016 7:48 pm
மைசூர்பாக்’
தீபாவளி பட்டாசுக்கு மட்டுமல்ல ஸ்வீட்டுக்கும் பிரபலமான விழா தான். அதிலும் மைசூர்பா இல்லாமல் தீபாவளியே இல்லை எனலாம். எவ்வளவு நாள் தான் நமக்கு பிடித்த மைசூர்பாவை கடைகளில் வாங்கி சாப்பிடுவோம், இந்த தீபாவளிக்கு மைசூர்பா நம்ம வீட்டிலேயே செஞ்சு அசத்திடுவோம்.
தேவையான பொருள்கள்
* கடலை மாவு - 1 கப்
* சர்க்கரை - 2 1/2 கப்
* நெய் - 2 1/2 கப்
செய்முறை
* சலித்த கடலை மாவை 2 முதல் 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுக்கவும்.
* மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
* மிதமான வெப்பத்தில் சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.
* வறுத்த கடலை மாவுடன் மிதமான வெப்பத்தில் கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் கலக்கவும்.
* கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக கட்டியாக கட்டியாக சேர்த்து கிளறவும்.
* இறுதியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
* தட்டில் கொட்டிய மைசூர்பா கலவையை ஒரு நெய் தடவிய கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்வும்.
* பின்னர் இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டி மைசூர்பா வை பரிமாறலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum