"குலாப் ஜாமூன் செய்யும் முறை..!
Mon Oct 31, 2016 7:17 pm
தேவையான பொருள்கள் :
பால் பவுடர் - 2 1/2 கப்
பால் - தேவையான அளவு (கலப்பதற்கு)
நெய் (அ) டால்டா - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 5 கப்
பேக்கிங் பவுடர் - சிறிது
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் - அரை கப் (பொரிப்பதற்கு)
செய்முறை :
பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் (அ) டால்டா சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.
டேஸ்டி குலாப் ஜாமுன் ரெடி. குறைந்தது 3 - 4 மணி நேரம் வரை குலாப் ஜாமூன் பாகில் ஊற வேண்டும்.
Re: "குலாப் ஜாமூன் செய்யும் முறை..!
Mon Oct 31, 2016 7:45 pm
குலோப்ஜாமூன் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்)
தேவையான பொருட்கள்
கோவா ஸ்வீட் இல்லாத - 400 கிராம்
மைதா - 100 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
தண்ணீர் - சர்க்கரைக்கு சமமான அளவு தண்ணீர்
ரோஸ் வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முன் குறிப்பு:
1. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கோவாவில் குலோப்ஜாமூன் செய்தால், அதன் கலர் கறுப்பாக ஆகிவிடும்.
2.எருமை மாட்டுப் பாலில் தயாரிக்கப்பட்ட கோவாவில் செய்தால், வெள்ளையாக இருக்கும்.
1.கோவாவையும் மைதா மாவையும் சேர்த்து ஒன்றோடு ஒன்று நன்கு சேரும் வகையில் பிசைந்து கலந்து கொள்ளவும்.
2. இதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீருடன் சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும் ஏலக்காய்த்தூள், ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கி வடிகட்டவும்.
4. சர்க்கரைப்பாகு சற்று ஆறியதும் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சர்க்கரைப்பாகில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
உருண்டை சற்று ஆறியதும்தான் சர்க்கரைப்பாகில் ஊறவைக்க வேண்டும். அதிக சூட்டில் இருந்தால் உருண்டையில் ‘சுகர் சிரப்’ ஏறாது. சுவைக்கக் கடினமாகவும் இருக்கும். இதே போன்று சர்க்கரைப்பாகு அதிக சூட்டில் இருக்கும்போது உருண்டைகளை ஊறவைத்தால் உருண்டைகள் உடைந்து விடும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum