புதைக்க அல்ல.. விதைக்கவே !!
Tue Oct 18, 2016 7:35 pm
தேவன் உன்னை மண்ணில் போட்டால்..
அது அவர் உன்னைப் புதைக்க அல்ல..
விதைக்கவே !!
தேவன் உன்னை நெருப்பில் போட்டால்..
அது அவர் உன்னை சுட்டெரிக்க அல்ல..
சுத்திகரிக்கவே !!
தேவன் உன்னைத் தண்ணீரில் போட்டால்..
அது அவர் உன்னை மூழ்கடிக்க அல்ல..
முழுவதும் கழுவி எடுக்கவே !!
யோசேப்பு தன்னை ஒரு குழியில் போடப்பட்டவனாகவே கண்டான்..
ஆனால் தேவனோ அவனை ஒரு பிரதம மந்திரியாக்க விதைத்தார்
மூன்று எபிரேய வாலிபர்கள் தங்களை அக்கினியில் போடப்பட்டவர்களாகவே கண்டார்கள்..
ஆனால் தேவனோ அவர்களை மாகாணத்தின் அதிபதிகளாக்க சுத்திகரித்துக் கொண்டிருந்தார் !!
நாகமான் தன்னை நதியின் தண்ணீரீல் மூழ்கிக் கொண்டிருந்தவனாகக் கண்டான்..
ஆனால் தேவனோ அவனை ஒரு முழுமையான தலைவனாக்க முழுவதுமாகக் கழுவிக் கொண்டிருந்தார் !!
நீ எந்த நிலையிலிருந்தாலும் அது ஏதோ திடீரென்று ஒரு அசம்பாவிதத்தினால் சம்பவித்தது அல்ல..
ஆனால் அது ஒரு அற்புதமான கரத்தினால் வெகு கவனமாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது...
நீ உன்னை இன்று எப்படிப்பட்ட நிலையில் கண்டாலும்,அது ஏற்கனவே தேவன் உனக்காக வரைந்து வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே என்பதை அறிந்து கொள்..
ஆகவே சோர்ந்து போகாதே !
தேவன் உன் மேல் கண்ணும் கருத்துமாயிருக்கிறார் !
தேவன் உன்னை மிக அதிகமாய் நேசிக்கிறார் !
தைரியமாயிரு !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum