கல்லெறிதல் தண்டனை
Tue Sep 13, 2016 9:10 am
DEC
25
கல்லெறிதல் தண்டனை
விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்ஆனில் இல்லை ஏன்
The Verse of Stoning
சஹிஹ் புகாரி (Sahih Bukhari, Volume 8, Book 82, Number 816)
பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
உமர் (ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்து கொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறை வேற்றினோம்' (என்றும் உமர் (ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன். (இதே விவரமுள்ள ஹதீஸை இங்கே (Vol. 8, No. 817 and Vol. 9, No. 424;) மற்றும் சஹீஹ் முஸ்லீம் ஹதீஸில் இங்கே (No. 4194) பார்க்கலாம்)
விபச்சார குற்றத்திற்கு தண்டனையாக உள்ள இந்த "கல்லெறிந்துக் கொள்ளுதல்" வசனம், குர்ஆனில் இல்லை? ஏன்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum