எமில் ஜெபசிங் அவர்களின் சரித்திர சுவடுகள்
Tue Sep 13, 2016 9:02 am
எமில் ஜெபசிங் அவர்களின் சரித்திர சுவடுகள்.
நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களின் சரித்திர சுவடுகள்.
முடியாது என்று துவண்டு விடாதே.. முடியும் என்று முரண்டுபிடி.. நிச்சயம் சரித்திரம் உன்னை வரவேற்கும்.
யாத்திராகமம் 34:10 அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
இந்த பதிவை போதகர் அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களுக்கு தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி அர்ப்பணிக்கிறேன்... ஆமென்..
சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1940 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும்,கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், (Now in Tuticorin District) தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.
அண்ணனை தேவன் பயன்படுத்திய சரித்திர பதிவுகள்
1. 17 வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டார்
2. ஏற்று கொண்ட நாள்முதல் தேவனின் கடைசி கட்டளையான சுவிசேஷத்தை திறம் பட செய்தார்
3. வாலிப வயதில் விடுமுறை வேதாகம பள்ளியில் VBS (Vacation Bible School) அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்
4. இவரின் மனைவி ஆனந்தி ஜெபசிங் மற்றும் மூன்று பிள்ளைகளும் தேவனுடைய ஊழியத்தில் அதிக பங்கு வகிக்க துணையாய் இருந்தவர்
5. இவரை யாவரும் அன்போடு "அண்ணன்" என்று அழைப்பர்
6. இவர் ஊழியம் செய்த மொத்த வருடம் 45
7. இவர் ஊழியத்திற்கு ஆதாரமாக இருந்த வசனம் ரோமர் 15:20. மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,
8. FMPB என்ற ஓர் மாபெரும் மிசனரி இயக்கத்தின் முதல் பொது காரியதரிசியாக இருந்தவர் (General Secretary)
9. மே மாதம், 1980 ல் விஸ்வவாணி என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர்
10. பீகார், அசாம், குஜராத், ராஜஸ்த்தான் போன்ற வடமாநிலங்களின் ரட்சிப்புக்க்காக அரும்பாடுபட்டவர்
11. போப் கல்லூரி, ஸவயெர்புரம்த்தில் பேராசியராக பணியாற்றினார்
12. தேவன் இவரை ஊழியத்திற்கு அழைக்க தன்னுடைய வேலையை ராஜினமா செய்து விட்டு ஊழியத்திற்கு வந்தார். அன்றில் இருந்து தேவனுடைய திட்டத்தில் இருந்து பின்வாங்க வில்லை.
13. வேதாகமத்தில் இருந்து நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்
14. சுமார் 135 பாடல்கள் இவர் கைப்பட தேவனின் தெய்வீக ஞானத்தோடு எழுதியவர்
15. FMPB என்ற பேரியக்கத்தை ஆரம்பிப்பதில் முக்கிய நபரை இருந்தவர்
16. "எனது கொள்கை கிறிஸ்து யார் என்றே தெரியாத மக்களிடம் கிறிஸ்துவை கொண்டுபோய் சேர்ப்பது. இதை இன்னொருவர் போட்ட அஸ்திவாரத்தில் கட்டமாட்டேன்" என்று கூறி 1980 மே 1 விஸ்வவாணி என்ற ஊழியத்தை ஆரம்பித்தார்.
17. South Asia of TransWorld Radio வின் தலைமை நிர்வாகியாகவும் பதவி வகுத்தவர்
18. இவர் வகுத்த வானொலி செய்திகள் கிராம பகுதிகளிலும், துணை கண்டங்களிலும் அதிக பாதிப்பை உருவாக்கியது. பல ஆயிரங்கள் தேவனை சந்தித்தன..
19. இந்த ஊழியத்தில் மூலம் இரட்சிக்கப்படும் ஆத்துமாக்களுக்கு ‘India Believers Fellowship’ என்ற துணை ஊழியத்தையும் ஆரம்பித்தார்
20. இதன் மூலம் அவரவர் கிராமங்களில் ஆலயத்தை கட்டி அங்கும் ஆலய மணி ஓசையை கேட்க செய்தார்
21. இது மட்டும் அல்ல.. ‘The Good Samaritans’, ‘Vishwasi Sangati’ போன்ற ஊழியங்களை ஆரம்பித்து பல ஆயிரங்களை கிறிஸ்துவின் மந்தையில் இணைத்தார்
22. இந்த ஊழியத்தில் சுமார் 2000 மிசனரிகள் இனைந்து இந்தியா முழுவதும் தேவனின் நாமத்தை பறைசாற்றி வருகின்றனர்.
23. இந்தியாவில் பல மிஷனரி இயக்கங்கள், பல நூறு பிரிவுகளில் நடக்கும் ஊழியங்கள், பல லட்சம் சபை வேர்களை ஒன்றாக இணைப்பது இவரின் கடைசி ஆசையாக இருந்தது. அதன் காரணமாக ‘BLESS India – Vision 2020’ என்ற ஓர் ஊழியத்தையும் ஆரம்பித்து அனைத்து மிசனரி ஊழியங்களையும் இணைக்க அரும்பாடு பட்டவர்..
24. 2000 ஆண்டு மத்தியில் இவருக்கு புற்றுநோய் (CANCER) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
25. தன் உடல் நிலை பலவீனமாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் 13ன்று ஆண்டுகள் அதே பெலத்தோடு ஊழியம் செய்தார்.
26.அண்ணன் தினம்தோறும் அதிகாலை நான்கரை மணிக்கே எழுந்து ஜெபம் செய்பவர்
27.இவர் ஜெபம் செய்யும் பொது கண்ணீர் தானாக வரும். கண்ணீரோடு, அதிக பாரத்தோடு இந்திய தேசத்திற்காக முழங்காலில் நின்ற ஓர் மாமனிதர் .
இவருடைய ஊழியபாதையில் எனக்கு கிடைத்த சில சுவடுகளை இங்கே பதிகிறேன்.
1) ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் - பாடல் பிறந்த கதை
ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.
“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் ! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் ! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் !” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது.
இப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.
2) கஷ்டப்படுபவர்களின் மேல் உள்ள கரிசனம்
1980ல் சாமுவேல் என்ற ஓர் ஊழியர் வாலிப நாளில் தேவனை தெரிந்து கொண்டு மிசனரியாக அர்ப்பணித்து பெரியமலை, குஜராத் போன்ற இடங்களில் பலரை எசுவண்டை சேர்த்தார். ஒருமுறை தன் கண் பரிசோதனைக்காக அளிக்ராஹ் சென்று விட்டு திரும்பும் பொது தன் வீடு திருடர்களால் கொல்லையிடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முழுவதையும் இழந்த நிலையிலும் தொடர்ந்து தேவ ஊழியத்தை நிறைவேற்றினார். குறைந்த கண் பார்வையோடு கர்நாடகாவில் உள்ள ஓர் வேதாக கல்லூரியில் படிக்க வந்தார். அவரை ஓர் சுவிசேஷ ஊழியம் தாங்கி வந்தது. இவரை தாங்கியது வேறு யாரும் அல்ல.. நம் ஜெபசிங் அண்ணன் தான் மாதம் ருபாய் 450 கொடுத்து குடும்பத்தை தாங்கினார்.
(http://gloryofhiscross.org/woman.htm)
நாம் எவ்வளவு மிச்னரிகளை தாங்குகிறோம்??
இவர் விட்டு சென்ற இவரின் மனைவி ஆனந்தி ஜெபசிங் அவர்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். இவரின் மூன்று பிள்ளைகளான Mrs. டென்னிஸா டேவிட்சன், Mrs. ஷாலினி பட்ராஸ், திரு ஆன்று ஜெபசிங் அவர்களுக்காகவும் இவர்கள் தேவனுக்கென்று குடும்பமாக செய்யும் ஊழியங்களுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
http://tgsionline.org/page3/page3.html
http://www.christianmessenger.in/vishwa-vani-founder-n-emil-jebasingh-enters-glory/
http://gloryofhiscross.org/woman.htm
https://www.youtube.com/watch?v=JNbA_HGbh30
https://www.youtube.com/watch?v=4qxX9f6fFS0
http://salomechristo.blogspot.com/2013/04/blog-post_6466.html
http://salomechristo.blogspot.com/2012/07/bronemil-jebasingh-founder-vishwavani.html
கிறித்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum