ரோஜாப்பூ கீர்
Mon Sep 12, 2016 8:37 am
தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
அரிசி - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பிஸ்தா - 10
உலர் திராட்சை - 10
ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
குல்கந்த் - 10 கிராம்
ரோஜாப்பூ இதழ்கள் - 10-15
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி, அரிசி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் ஏலக்காய் பொடி தூவி, தீயை குறைவில் வைத்து அரிசி நன்கு வேகும் வரை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அரிசியானது நன்கு வெந்ததும், அதில் பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.
பின்பு அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், அதில் ரோஸ் வாட்டர், குல்கந்த் மற்றும் ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், ரோஜாப்பூ கீர் ரெடி!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum