உள்ளங்கையிலே வரைந்திருக்கிறேன்
Thu Sep 01, 2016 8:52 am
ஒரு சிறு பையன் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தனது தகப்பனாரை பார்க்கும்படி சுரங்கத்தின் வாசலில் காத்திருந்தான். வேலை முடிந்து சுரங்கத்திலிருந்து ஆட்கள் வெளியே வர தொடங்கினார்கள். அப்பொழுது ஒருவர் ‘தம்பி இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்’ என்று கேட்டார் அப்போது அவன் ‘ எங்க அப்பா வேலை முடித்து வருவதற்;காய் காத்திருக்கிறேன்’ என்று பதிலளித்தான்.
‘உங்கள் அப்பாவை உன்னால் கண்டுபிடிக்க முடியாது’ நிலக்கரித் தூசியால் முகம் கருப்படைந்து இருக்கும்’ தலையில் தலைகவசம் அணிந்து சுமார் 700 பேர் வருவார்கள். உனக்கு அவரை தெரிந்து கொள்ள முடியாது. நீ வீட்டுக்கு போ என்றார். அதற்கு அச்சிறுவன் ‘எனக்கு அவர கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் எங்க அப்பாவுக்கு ‘என்னை நன்றாக தெரியும் என்று பதிலளித்தான்’. எவ்வளவு ஒரு ஆச்சரியமான பதில்.
அருமையானவரே நம்முடைய பிரச்சனைகளின் காரணமாக ‘உண்மையிலேயே பரலோக பிதா நம்மை கண்டுகொள்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அவர் நம்மை அறிந்திருக்கிறார் மத்தேயு3:32, அவர் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார் 1பேதுரு5:7, அந்த சிறுவனை போல நீங்கள் சொல்வீர்களா ‘இயேசப்பாவுக்கு என்னை தெரியும்’ என்று. இம்மாத வாக்குத்தத்த செய்தியாக ஏசாயா 49:16 இதோ உன்னை என் உள்ளங்கையிலே வரைந்திருக்கிறேன்.
இதற்கு முந்திய வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து ஆண்டவர் கூறும் வார்த்தைகள் கர்த்தர் என்னை மறந்துவிட்டார். எப்படி நான் அவரை விசுவாசிக்க முடியும். என்று கேட்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் பெற்ற தாய் தன் பாலகனை மறந்தாலும் நான் உங்களை மறப்பதில்லை. உங்களை என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் என்றார். எனவே கர்த்தருடைய பிள்ளைகளே நம்மை ஆண்டவர் அறிந்தவர் மாத்திரம் அல்ல நம்முடைய துவக்கத்தையும் முடிவையும் தமது கரத்திலே வைத்திருக்கிறார். ஆமென். அல்லேலுயா.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum