வளமான வாழ்க்கைக்கு 4 நச் டிப்ஸ்!
Sat Aug 20, 2016 11:55 am
நம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது நிதி சார்ந்த விஷயங்கள் மற்றும் அது குறித்த படிப்பினைகளில் யாரும் அதிக கவனம் செலுத்துவது இல்லை. ஆனால், முதன் முறையாகக் கல்லூரி படிப்புகள் முடித்து நிஜ உலகில் வெளியே வரும்போதுதான் இதுகுறித்து தேடலும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பலருக்கு வருகிறது.
ஆக, வசதியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் எனில் நிதி சார்ந்த விஷயங்கள் பற்றி புரிந்து கொள்ள மிக முக்கியமான நாலு விஷயங்களைப் பார்ப்போம்!
1. சுயக் கட்டுப்பாடு
நிதி சார்ந்த விஷயத்தை முதலில் தெரிந்துகொள்ளும் முன் சுய கட்டுப்பாடு பற்றி தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய பெற்றோர் நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு பற்றிக் கற்றுக்கொடுத்து இருந்தால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். இல்லையா கவலையைவிடுங்கள், இன்றிலிருந்தாவது சுயக்கட்டுப்பாடு குறித்து மனதில் விதையுங்கள்.
2. பணம் எங்கே போகிறது?
நீங்கள் சம்பாதிக்கும் வருமானத்தைவிடச் செலவழிக்கும் பணம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பணம் எங்கு போகிறது; எதற்கெல்லாம் செலவிடப்படுகிறது என்பதைக் கண்டறிந்து ஒரு சிறிய நோட் புத்தகத்தில் குறித்துக்கொள்ளுங்கள். இதில் தேவையில்லாத மற்றும் அதிகமாகச் செலவு செய்யும் விஷயங்களைக் கண்காணித்து ஒவ்வொன்றாக முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்.
3. பணமும் உடல்நலமும்
வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கலாம். ஆனால், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையே வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. உங்கள் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்துங்கள்; அதேசமயம் அவசர மருத்துவ தேவைக்காக பணத்தை இன்றிலிருந்தாவது சேமிக்கத் தொடங்குங்கள் அல்லது அது சார்ந்த திட்டங்களில் முதலீட்டை இன்றே தொடங்குங்கள்.
4. இப்போதே ஓய்வு
கல்லூரி படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்த முதல் ஆண்டே, உங்கள் வாழ்க்கையில் ஓய்வுக்காலம் குறித்துத் திட்டமிட்டு முதலீட்டு நடவடிக்கையைத் தொடங்குங்கள். ஏனெனில் கூட்டு வட்டியின் மூலம் நீங்கள் சேமிக்கும் பணம் பலமடங்காகும். 25 வயதிலிருந்தே நீங்கள் சேமிக்கும் பழக்கத்தை ஆரம்பித்தால் 45 வது வயதிலேயே ஒரு கோடி ரூபாய் பணத்துடன் சொந்த ஊரிலோ அல்லது கிராமத்திலோ அல்லது நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை நிச்சயம் நீங்கள் அமைத்துக்கொள்ள இயலும்.
ஆகையால் இன்று முதல் நிதி சார்ந்த விஷயத்தில் கொஞ்சம் கவனத்தைத் திருப்புங்கள். இது குறித்த தேடல்களை உடனடியாக தொடங்குங்கள்.
இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் என உங்கள் நிதி சார்பான சந்தேகம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு navdesk@vikatan.com என்ற இமெயில் முகவரிக்கு உங்களுடைய கேள்விகளை அனுப்புங்கள். எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பதிலளிக்க காத்திருக்கிறோம்.
சோ.கார்த்திகேயன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum