கேட்ஜெட்ஸ்-களிடமிருந்து கண்களைப் பாதுகாக்க 20:20:20 வியூகம்!
Thu Aug 18, 2016 7:43 am
“மொபைல் போன்கள் உபயோகித்தால், கேன்சர் வரும்” – இது மிக நீண்ட நாளாகவே சொல்லப்படும் பொய் அல்லது இதுவரை நிரூபிக்கப்படாத உண்மை. இதுவரை நடத்தப்பட்ட எந்தவொரு மருத்துவ ஆய்விலும் மேற்கண்ட விஷயம் உண்மை என நிரூபிக்கப்படவில்லை. தற்போது அத்துடன் புதிதாக இணைந்துள்ளது கண் புற்றுநோய் அச்சம். இருட்டில் வைத்து கேட்ஜெட்களை உபயோகித்தால், நிச்சயம் கண் புற்றுநோய் வரும் என வதந்திகள், வாட்ஸ் அப்பில் வலம் வந்தபடி இருக்க, இந்த சந்தேகத்தை அப்படியே கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷிடம் கொண்டு சென்றோம்.
[img(119.55556000000001px,142.55556px)]http://img.vikatan.com/news/2016/08/17/images/Dr.jpg[/img]“பொதுவாக நாம் கேட்ஜெட்களை உபயோகிப்பதால், கண்கள் பாதிக்கப்படுவது உண்மையே! நாம் தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்க்கும் போது, நமது கண்ணின் தசைகள் இயல்பாக இருக்கின்றன. ஆனால் கிட்ட இருக்கும் பொருட்களைப் பார்க்கும் போது, கண் தசைகள் அதிகம் இயங்குகின்றன. இதனால் அருகில் வைத்து மொபைல் ஸ்க்ரீன் மற்றும் கணினிகளை பார்க்கும் போது, கண் தசைகள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. ஒரு நிமிடத்திற்கு இயல்பாக 16 முதல் 18 தடவை வரை கண்களை இமைக்க வேண்டும். ஆனால் நாம் கேட்ஜெட்களை உபயோகிக்கும் போது, நாம் கண் சிமிட்ட மறந்து விடுகிறோம். இதனால் கண்ணில் வறட்சி ஏற்படும்.
இரத்தம்தான் உடலில் எல்லா இடங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்கிறது. நமது உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண்ணின் கருவிழிதான். எனவே கண்ணிற்கு ஆக்சிஜன், நாம் கண் சிமிட்டுவதன் மூலமே கிடைக்கும். நமது கண்ணீர் சுரப்பிகள் தேவையான அளவு கண்ணீரை சுரக்கும். இவைதான் கருவிழிக்கு ஆக்சிஜன் வழங்குகின்றன. எனவே நாம் கண் சிமிட்டாமல் இருப்பதன் மூலம், கருவிழிக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. அதுவும் ஏ.சி.,யில் வேலை செய்பவர்களுக்கு விரைவில் கண் வறட்சி ஏற்பட்டுவிடும். மொபைல், கணினி உள்ளிட்ட எந்த கேட்ஜெட்டுகளையும் போதுமான வெளிச்சத்தில்தான் உபயோகிக்க வேண்டும். மொபைலின் வெளிச்சமும் (Display Brightness), சுற்றுப்புற வெளிச்சமும் சரியான அளவில் இருக்க வேண்டும். இரண்டுமே அதிகமாகவும் இருக்கக் கூடாது; குறைவாகவும் இருக்கக் கூடாது. இது மிகவும் முக்கியம். அதற்கடுத்து பார்க்கும் கோணம். கேட்ஜெட்டுகளை நமது கண்ணுக்கு நேராகவோ, மேலேயோ வைத்து உபயோகிக்க கூடாது. நமது கண்கள் கீழ்ப்புறமாக பார்க்கும் படியே வைத்து பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கண்ணின் மேற்பகுதி தசைகள் இயங்காமல் ரிலாக்ஸாக இருக்கும்.
கேட்ஜெட்டுகளில் இருந்து வரும் ஒளியை High Energy Visible Light என்போம். இதனை இருட்டில் வைத்து காண்பது மிகவும் ஆபத்தானது. எனவே போதுமான வெளிச்சத்தில் வைத்துத்தான் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளை கையாள வேண்டும். இத்துடன் கேட்ஜெட்டுகளை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தால் கண் எரிச்சல், பார்வைக் குறைபாடு, தலைவலி, கண் சிவத்தல் மற்றும் கண்களில் மணல் துகள்கள் உறுத்துவது போன்ற உணர்வு ஆகியவை ஏற்படும். அதுவும் குழந்தைகளுக்கு இவற்றால் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என்பது பல ஆய்வுகளில் நிரூபணமான உண்மை. எனவே குழந்தைகள் கையில், மொபைலை கொடுக்கும் போது, கொஞ்சம் உஷாராக இருங்கள்! கண்களை அடிக்கடி கசக்கும் போது, கைகளில் உள்ள அழுக்குகள் பட்டு, கண்களில் சிறிய அளவில் கட்டிகள் வரலாம். அதுவும் கேன்சர் கட்டிகள் எல்லாம் கிடையாது.
எனவே பலரும் அஞ்சுவது போல, இருட்டில் வைத்து மொபைல் உபயோகித்தால் கண் புற்றுநோய் எல்லாம் வரவே வராது. அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என நிறுத்தியவர், கண்களை இதில் இருந்து பாதுகாக்க டிப்ஸ்களையும் தந்தார்.
1.) குறிப்பாக கணினிகளில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் Anti Reflecting Coating கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம்.
2.) வெகு சீக்கிரம் கண் அயர்ச்சி மற்றும் கண் வறட்சி அடைபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கண் மருந்துகளை உபயோகிக்கலாம்.
3.) பல மணி நேரம் கேட்ஜெட்களை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் 20:20:20 என்ற விதியினைப் பின்பற்றலாம். அதாவது 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடியில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இதனால் கண் தசைகள் சில விநாடிகள் ஒய்வு பெறும்.
4.) கண்கள் அடிக்கடி உறுத்துவது போல இருந்ந்தாலும் கூட, கண்களை கசக்கவோ, தேய்க்கவோ கூடாது.
5.) ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 18 முறை நிச்சயம் கண் சிமிட்ட வேண்டும். இதனை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த அளவிற்கு குறைவாக கேட்ஜெட்டுகளை பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கும், நம் கண்களுக்கும் நல்லது’ எனநம் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் திரிவேணி வெங்கடேஷ்.

- ஞா.சுதாகர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum