தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பேராசை பெரு நஷ்டம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பேராசை பெரு நஷ்டம் Empty பேராசை பெரு நஷ்டம்

Fri Aug 12, 2016 3:07 pm
ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். 
>அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். 
>ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

>ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். 
>ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; 
>வீடு மிகப் பெரியது. 
>ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. 
>அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். 
>கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்

_இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. 
_இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். 
_ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். >கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். 
>எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். 
>திருப்தி கொள்வேன். 
>அதிக ஆசைப் படமாட்டேன்..! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.
_நான் உனக்கு உதவப் போகிறேன். 
_நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. 
_நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். 
_உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்.
> பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். 
* அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. >உடனே அவன் கோணிப்பையை விரித்தான். 
>அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: 
>கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். >அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை.
^ பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். 
^ அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. 
^ அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது.
^ கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. 
^உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். 
^அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. 
போதாது. 
^இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன்.
* அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, 
* உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது . 
-பிச்சைக்காரன் சொன்னான் இன்னும் கொஞ்சம் வேண்டும் . அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.
^ உன் கோணிப்பை கிழியப் போகிறது. 
^ பிச்சைக்காரன் மறுத்தான். 
இல்லை நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு...! 
^ என் கோணிப்பை தாங்கும் மறு வினாடி கோணிப்பை கிழிந்தது.
^ அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. 
^ அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்
+ ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
+ பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.
+ மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
+ பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
+ நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
சகல பிராணிகளும் திருப்தி அடைகிறது... 
ஆனால் நாம்.....?????????
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum