நமது பாரம்பரிய நெல் விதைகள் சேகரிப்பு தொழில்நுட்பம்...!!
Fri Aug 12, 2016 12:08 am
நமது பாரம்பரிய நெல் விதைகள் சேகரிப்பு தொழில்நுட்பம்...!!
தானிய சேமிப்பு முறை (அ) தானிய சேமிப்பு குதிர்
#குளுமை என்று சொல்வார்கள்
அதாவது குறிப்பிட்ட அளவில் விதைகள் ஈரப்பதத்தோடு இருக்கும்..!!
அதனாலே குளுமை என்ற பெயர் வந்திருக்கலாம்..!!
இக்கால "cold storage" களுக்கு சவால் விடும்தொழில்நுட்பம் அடங்கியது குளுமை... என்கிற தானிய சேமிப்பு குதிர்
1. புற்று மண்
2. பசுஞ் சாணம்
போன்றவற்றை கரைத்து மெழுகி ஒருநாள் காயவிட்டு நெல்லை கொட்டி மேல் புறம் சிறு மண் கலயத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து சுற்றிலும் புங்க இலைகள் போட்டு மேல்பகுதிதட்டை வைத்து நாட்டுப்பசுஞ் சாணியால் மெழுகி வைத்துவிடுவர்...!!
ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது,
மேலும் திரும்ப விதை நன்கு முளைப்பதற்கான தட்ப வெட்பம் இதில் பேணப்படுகிறது...!!
பிறகு திறந்து பார்க்கும்போது மண்கலய நீர்முக்கால்வாசி அப்படியே இருக்கும்..!!
புறஊதாக்கதிர்கள்
அகச்சிவப்புகதிர்கள் - போன்ற கதிர்வீச்சு பாதிப்பு சுத்தமாக இருக்காது...!!
இன்று பல கிராமங்களில் இம்முறை காணாமல்போய் வருகிறது.
இதைக் குறித்த இன்னும் சில படங்கள் - உங்கள் பார்வைக்கு...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum