தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நிறைவாகத் தருகிறவர் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நிறைவாகத் தருகிறவர் Empty நிறைவாகத் தருகிறவர்

Thu Aug 11, 2016 5:50 pm
அதிகமாகப் பிறருக்குக் கொடுக்கும் நபர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். “அவன் கிள்ளிக் கொடுக்கிற ஆள் இல்லடா, அள்ளிக் கொடுக்கிற ஆள்” என புகழ்ந்து தள்ளுவார்கள். கஞ்சன் எப்போதுமே சமூகத்தில் இழிவான பெயரைத் தான் சம்பாதிப்பான். அவன் சுயநலத்தின் சுருக்கமான வடிவம்.


நமது தேவன் நிறைவாகக் கொடுக்கிற தேவன்.
நமது தேவன் மிகுதியாகக் கொடுக்கிற தேவன்.


ஐந்து அப்பம் இரண்டு மீனை பகிர்ந்து கொடுத்தபோது பன்னிரண்டு கூடைகள் மிகுதியாய் இருந்தன. போதும் போதும் எனுமளவுக்கு சாப்பிட்டார்கள். நிறைவைத் தாண்டியும் அவர்களிடம் உணவு இருந்தது.


கடவுள் நிறைவாகத் தருகிறவர். தீர்ந்து போகாத அளவுக்கு காற்றைத் தந்திருக்கிறார். தாகத்தை விரட்டும் தண்ணீரைத் தந்திருக்கிறார். பசியை அகற்றும் உணவைத் தந்திருக்கிறார். நலமோடு வாழக்கூடிய காலநிலைகளைத் தந்திருக்கிறார். ஆறுகள், மலைகள், காடுகள், கடல்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் என விழிகளுக்கும், வாழ்வுக்கும் தேவையானவற்றையெல்லாம் தந்திருக்கிறார்.


இறைவன் நமக்குத் தந்தவற்றையும், அவர் நமக்காக செய்தவற்றையும் மனிதன் புரிந்து கொள்வதற்கே ஆயிரம் தலைமுறை தேவைப்படும். அச்சில் சுழலும் ஒரு கோளை அரையடி தூரம் மாற்றி வைத்தால் பூமி பஸ்பமாகலாம். சுற்றிக் கொண்டிருக்கும் பூமியை கொஞ்சம் வேகமாகச் சுழற்றி விட்டால் உயிர்கள் செத்து மடியலாம். சூரியனை கொஞ்சம் நெருங்கி வரச் செய்தால் நாம் கருகிப் போகலாம்.


கடவுள் எல்லாவற்றையும் அதனதன் இடத்தில், அதனதன் திசையில், அதனதன் விசையில், அதனதன் பணியில் மிக மிக நேர்த்தியாக வைத்திருக்கிறார். அதைப் புரிந்து கொள்ள முயல்வது, சுண்டெலி ஒன்று சாக்ரடீஸின் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முயல்வதைப் போல தான்.


இறைவன் வளங்களை அளித்து அதைப் பயன்படுத்தச் சொன்னார். நாம் வளங்களை அழித்தும் அவருக்கு எதிரான செயல்களைச் செய்து வருகிறோம். அல்லது சுயநலச் சுருட்டல்களால் மனித விரோத செயல்களைச் செய்து வருகிறோம். பூமியில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் அது தான்.


நமது வாழ்வுக்கான அனைத்தையும் அற்புதமாய்ச் செய்து வைத்த இறைவன் எதையெல்லாம் நமக்கு மிகுதியாய்த் தந்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் ?
 
[list="border: 0px none; margin: 5px 0px 5px 30px; padding-right: 0px; padding-left: 0px; color: rgb(44, 43, 43); font-family: arial; line-height: 18px; background-color: rgb(255, 255, 255);"]
[*]நிறைவான அன்பு
[/list]


அன்பு என்பதை அளந்து கொடுக்கக் கூடாது என்பதில் இயேசு தீர்க்கமாய் இருந்தார். அளந்து கொடுத்தால் அது கணக்கு. அளக்காமல் கொடுத்தால் தான் அது அன்பு. “அமுக்கிக் குலுக்கி” எவ்வளவு அதிகமாய்க் கொடுக்க முடியுமோ அதைத் தான் இயேசு கொடுக்கச் சொன்னார். அதையே அவர் சிலுவையில் செய்தும் காட்டினார்.


அவர் நமக்குத் தந்திருப்பது நிறைவான இதயம். அந்த இதயத்திலிருந்து வெளிப்படும் அன்பை அளந்து பார்க்காமல் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். உன் தோழனுக்கு மட்டுமல்ல, உன் எதிரிக்கும் அன்பு செய் என்றல்லவா சொன்னார். நாம் அன்பின் நிறைவை பிறருக்கு அளிக்கின்றோமா ?
 
“என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்” எனும் பிலிப்பியர் வசனம் நமது இவ்வுலகத் தேவைகளை இறைவன் நிறைவு செய்வார் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது.


தாகமாய் இருப்பவனிடம் போய் தத்துவம் பேசுவது எடுபடாது. பசியாய் இருப்பவனிடம் போய் பரலோகம் பற்றிப் பேசினால் புரியாது. அவனுடைய உலகத் தேவைகளும் நிறைவேற வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளை இறைவன் நிறைவு செய்கிறார். கடவுள் அவசியங்களை அனுமதிக்கிறவர், ஆடம்பரங்களை ஆதரிக்கிறவர் அல்ல.


ஏழையாய் இருந்தேன் உண்ணத் தந்தீர்கள் ‍ என நம்மைப் பார்த்து இறைவன் பேசவேண்டும். அந்த பணிகளைச் செய்கிறோமா ?
 
இறைவன் தர விரும்புகின்ற மிக முக்கியமான வளம் ஆன்மீக வளம் தான். அதற்காகத் தான் அவர் தூய ஆவியானவரை நமக்குத் தந்திருக்கிறார். ஆன்மீகத்தில் ஆழமாய் வளரவும், ஆன்மீகப் பாதையை சரி செய்து கொள்ளவும் 24/7 நமக்கு ஒருவர் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.


பழைய ஏற்பாடு கட்டளைகள் சார்ந்து இருந்தது. கட்டளைகளைக் கடைபிடித்தால் முழு மனிதனாகி விடுவான் என்பதே அன்றைய‌.


புதிய ஏற்பாடு நமது சிந்தனைகளை, நோக்கங்களை, காரண காரியங்களை சீர்படுத்த அழைப்பு விடுக்கிறது. இது ஆடை அணிவதைப் போன்ற புனிதம் அல்ல. உடலை அணியும் புனிதம். தூய ஆவி எனும் நெருப்பினால் நமது பாவங்களைச் சாம்பலாக்கி, அதிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவையாய் நம்மை சிறகடிக்கச் செய்யும் இறைவனின் திட்டம்.


நாம் இன்னும் சட்டங்களைப் பற்றிக் கொள்கிறோமா ? இறைவனின் அன்பைப் பற்றிக் கொள்கிறோமா ?
 
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். நமது ஆண்டவர் நமக்கு வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார். கடைசி மணி நேரத்தில் திராட்சை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவனுக்கும் ஒரு முழு நாளைக்கான ஊதியத்தைத் தர ஆவலாய் இருக்கிறர்.


நமது பாவங்களுக்கான மன்னிப்பை நாம் கேட்கும்போதெல்லாம் அவர் தருகிறார். நாம் மனம் திரும்புவதற்கான அத்தனை வழிகளையும் நமக்குக் காட்டுகிறார். நம் ஆண்டவர் வாய்ப்புகளை நிறைவாகத் தரும் ஆண்டவர்.
கடவுளால் பயன்படுத்தப்படுபவர்களாக நாம் இருக்கிறோமா ? இல்லை கடவுளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கிறோமா ?
 
என் கிருபை உனக்குப் போதும் (2 கொரி 12 :9)  என்றும், உமது கிருபைகள் கிழமை தோறும் புதியவைகள் என்றும் சொல்கின்ற வசனங்கள் இறைவனின் கிருபையின் நிறைவை எடுத்துரைக்கின்றன. “இறைவனின் கிருபை கொஞ்சம் கம்மியாகிவிட்டது” என்று யாரும் எந்தக் காலத்திலும் குறை சொல்லவே முடியாது.


“பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். ( ரோமர் 6 :14) எனும் இறை வசனம் வலுவூட்டுகிறது. நாம் எந்த விதமான பாவத்திலும் விழாதபடி காக்குமளவுக்கு கிருபை இறைவனால் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
நாம் அருளைப் பற்றிக் கொள்கிறோமா ? இருளைப் பற்றிக் கொள்கிறோமா ?
 
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சுயத்தை வெறுத்து, இறைவனை சுமந்து வாழும் வாழ்க்கை. அது சோதனைகளையும், வேதனைகளையும் கொண்டு வரும் என்பதே நமக்கு விவிலியமும், இறை மனிதர்களின் வாழ்க்கையும் சொல்லும் செய்தியாகும்.


அந்த வலிகளையும், சோதனைகளை வெல்லும் வலிமையை இறைவன் நமக்கு நிறைவாக அருள்கிறார். நாம் அவரோடு இணைந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது எதிர்பார்ப்பு. அப்போது “என்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுகிறான்” என நமக்காய் அவர் களமிறங்குகிறார். சிங்கத்தின் மீதிருக்கும் சிற்றெறும்பாய் நமக்கு மாபெரும் பலம் வந்து விடும்.


இறைவனின் வலிமையை சாத்தானின் எதிரே தைரியமாய்ப் பயன்படுத்துகிறோமா ?
 
இறைவன் நமக்கு அருளும் அருட் கொடைகளில் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சி. ஆனந்தம். அதை அவர் நிறைவாகப் பொழிகிறார். இயேசுவோடு இணைந்திருக்கும் போது எப்போதுமே மகிழ்ச்சியாய் இருக்கும் அனுபவம் கிடைக்கும் என்கிறது வேதாகமம்.


“ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.(பிலிப்பியர் 4:4) எனும் இறைவார்த்தை நமது மகிழ்ச்சியில் இறைவனும் இணைகிறார் என்கிறது. அத்தகைய மகிழ்ச்சியே இறைவன் தரும் நிறைவான மகிழ்ச்சி.


எத்தகைய சூழலிலும் இறைவனோடு மகிழ்ச்சியாய் இருக்கும் குற்றமற்ற மனம் நம்மிடம் இருக்கிறதா ?
 
உலகம் தருகின்ற சமாதானம் என்பது தற்காலிக வலிநிவாரணி போன்றது. இறைவன் தருகின்ற சமாதானமோ பூரண நிறைவானது. நாம் சமாதானம் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
“உங்களுக்கு சமாதானம்” என இயேசு சொல்லும் போது நமது இதயம் சமாதானம் செய்ய தயாராய் இருந்தால் இறை சமாதானம் நம்மில் வந்து தங்கும். நமது இல்லம் சமாதானம் அமர முடியாத அளவுக்கு வெறுப்பின் முட்களால் நிரம்பியிருந்தால் இறை சமாதானம் தங்குவதில்லை.


நமது இதயத்தை சமாதானம் தங்கும் சமதளங்களாய் மாற்றுவோமா ?
 
இறைவனின் கருணையும், இறைவனின் பொறுமையும் வியப்பின் உச்சம். நமது குழந்தையிடம் “ஒரு விஷயத்தைச் செய்யாதே” என இரண்டு தடவை சொல்வோம். மூன்றாவது முறை அந்தத் தவறைச் செய்தால் விளாசி விடுவோம். இறைவனின் பொறுமையை நினைத்துப் பாருங்கள்.


எத்தனை முறை ஒரே பாவத்தை திரும்பத் திரும்பச் செய்கிறோம். இறைவன் தண்டனை தர களமிறங்கினால் நமது நிலமை என்ன ? அவரோ நீடிய பொறுமையோடு நம்மை வழிநடத்துகிறார்.


அவருடைய பொறுமை நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என விரும்புகிறார். அதற்காகத் தான் ஆவியின் கனிகளில் பொறுமையை நிரப்பி, நமது இதயங்களில் தூய ஆவியை நிரப்புகிறார். நாம் இறைவனின் பொறுமையை பிறரோடு பகிந்து கொள்கிறோமா ?
 
[list=10]
[*]நிறைவான ஆறுதல்
[/list]


வாழ்க்கைப் பாதையில் நமக்கு வருகின்ற மிகப்பெரிய துயரத்தின் அலைகளை வெற்றி கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆறுதல் இறைவனே. நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் அவரால் நடக்கின்றன என்பதை நம்புவதில் இருக்கிறது வாழ்க்கையின் ஆறுதல்.


என்னை அவர் தனது உள்ளங்கையில் வரைந்திருக்கிறார், அவரது அனுமதியின்றி எனது தலைமயிர் ஒன்று கூட உதிராது போன்ற விசுவாசம் நமக்கு இறைவனின் ஆறுதலைக் கொண்டு வருகிறது. இறைவனோடு கூட பயணிக்கும் போது அலையில் நடுவிலும் நிலவும் ஆறுதலைக் கண்டு கொள்ள முடியும்.


முடிவாக, இறைவன் எதையும் நிறைவாய்த் தருகிற இறைவன். “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” என்கிறார். ஆன்மீக வளங்களையும், உலக வளங்களையும், உணர்வு ரீதியான வளங்களையும் அனைத்தையும் அவரே தருகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவரோடு இணைந்திருத்தல் !!


அவரில் நிலைத்திருப்போம்.
அவரையே நினைத்திருப்போம்.


நன்றி: சகோ.சேவியர்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum