அகத்திக்கீரை
Sat Aug 06, 2016 8:03 am
அகத்திக்கீரை
அகம் + தீ + இலை = அகத்திஇலை.
அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது.
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் 'ஏ' சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.
பெண்களுக்கு உடல் பலகீனத்தால் எலும்புகலானது பாதிப்படையும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து எலும்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்க்கக்கூடியது அகத்திக்கீரை. உடலில் உண்டாகும் கெட்ட நீரினை வெளியேற்றுகிறது. குடலில் தேங்கும் நிணநீர், மலங்கள் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து வெளியேற்றவும் உதவுகிறது. உணவில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். நாக்கு பூச்சிகள் ஒழியும். வாய்ப்புண் ஏற்படாது. வாய் துர்நாற்றம் போக்கக்கூடியது. வியர்வை நாற்றம் நீக்கும்.
காப்பி, டீ அதிகமாக சாப்பிட்டு அதனால் பித்தம் அதிகமானவர்கள் வாரம் ஒருமுறை உணவுடன் அகத்திக்கீரை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
குடும்பத்தில் பாசத்தின் மிகுதியால் கொடுக்கப்படும் இடுமருந்துகளின் தன்மையை முறிப்பதற்கு அகத்திக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. இடுமருந்து சாப்பிட்டு இருப்பது உறுதியாக தெரியுமானால் தினம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு கீரையை சாறு எடுத்து குடிக்கவும். பின்னர் வாரம் ஒருமுறை சாறை தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளித்து வர இடுமருந்தினால் உண்டான மனக்கலக்கம், சித்த பிரம்மை, பயம், பயித்தியம் படிப்படியாக குறையும்.
அகத்திக்கீரையை சூப் செய்து பார்க்கலாமா..? கீரையை சுத்தப்படுத்தி, தேவையான அளவு தண்ணீர் வாணலியில் இட்டு, தண்ணீர் கொதித்த உடன் சுத்தப்படுத்திய கீரையை அதில் போட்டு, சாம்பார் வெங்காயம், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்து வந்த பின்னர் அதை சில நிமிடங்கள் ஆறவைத்து, வடிகட்டி அப்படியே சூப்பாகா சாப்பிடலாம். அதில் இருக்கும் வெங்காயத்தினையும் அப்படியே சாப்பிட்டுக்கொள்ளலாம். சூப்பரான சூப் என்று உங்கள் குழந்தைகளும் கூறுவார்கள். பாருங்களேன்.
அகத்திக்கீரை யார் யார் எடுக்கவேண்டும்?
எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியான ஒரு முக்கிய தகவலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையினை தொடக்கூடாது.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கீரையினை சாப்பிடக்கூடாது.
தினசரி உணவோடு சேர்த்து சாபிட்டால் உடலில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum