முருங்கைக்கீரை
Sat Aug 06, 2016 8:01 am
முருங்கைக்கீரை
இன்று நம் பதிவில் முருங்கைக்கீரையைப்பற்றியும் அதோட பயன்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிரலாம் என்று இருக்கிறேன்.
முருங்கை மரமானது, ரத்த விருத்தியையும், தாது விருத்தியையும் உண்டாக்கக்கூடியது என்பதால் இது பிரம்மாவின் அம்சம் என கருதப்படுகிறது. முருங்கையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் 'சி', வைட்டமின் 'ஏ' சத்து அடங்கியுள்ளது. மேலும், வைட்டமின் 'பி' சத்தின் அம்சமான தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் இதில் அடங்கியுள்ளது.
உங்களுக்கு பசி எடுக்கிறதா? வீட்டில் சாப்பிட டிபன் சாப்பாடு என எதுவும் இல்லையா? உடனடியாக உங்கள் பசி அடங்க - முருங்கைக்கீரையை வதக்கி சாப்பிட்டு, சிறிதளவு மோர் குடித்தால் போதும், சில நிமிடங்களில் உங்கள் வயிறு கப்,சிப் ஆகிவிடும்.
உங்கள் உடல் வலிமைக்கும், மனோதிடத்தை கொடுப்பதற்கும் முருங்கைக்கீரையை நெய் அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்து வதக்கி சீரகம், வெங்காயம், பூண்டு, மிளகு இவைகளையும் சேர்த்து பொரியல் போல சாப்பிட்டு வந்தால் ஏழு வையான தாது சத்துக்களும் உடலில் சேர்ந்துவிடும். இந்த பொரியல் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கூட உடலில் இருந்து ஓடிப்போய்விடும்.எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து.
இன்னும் சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும். அவங்க நான் இப்ப சொல்ற மாதிரி செஞ்சிட்டு வாங்க, அதாவது, முற்றிய முருங்கை இலை சாறு ஒரு அவுன்சு எடுத்து, காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வாங்க. இப்படி குடிச்சிட்டு வந்தீங்க அப்படின்னா, ரத்த அழுத்தம் குறைஞ்சிட்டு வரது மட்டும் இல்லாம, ரத்தத்துல இருக்குற கொழுப்பும் குறையும்.
உயிர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் வேற எந்த மாத்திரை மருந்தும் சாப்பிட வேண்டாங்க. முருங்கைப்பூவை கொஞ்சம் எடுத்து பசும்பாலில் போட்டுக்காய்ச்சி அதுகூட இனிப்புக்காக பனங்கற்கண்டும் சேர்த்து தினமும் ராத்திரி குடிச்சிட்டு வந்தீங்க அப்படின்னா, உயிர்ச்சத்து அதிகமாகும்.
முருங்கைப்பிசின் 10 கிராம், பாதாம் பருப்பு 5 எண்ணம் கூடவே கசகசா அரை ஸ்பூன் சேர்த்து, இத 12 மணி நேரம் தண்ணியில ஊறவச்சி அதுக்கப்புறம் அம்மியில அரைச்சி, இத காய்ச்சுன பாலோட கலந்து குடிச்சிட்டு வந்தீங்கன்னா, தாது கெட்டியாகி, பலப்பட்டு வரும். உங்க மேனி கூட பொலிவா இருக்கும்.
காலைல மட்டும்தான் உங்களுக்கு பால் குடிக்கிறதுக்கு வசதி இருக்கா, அதுக்கு ஒரு வழி முறை இருக்கு. அதையும் சொல்றேன். முருங்கை விதையில் உள்ள பருப்பை எடுத்து, அதோட பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு தலா பத்து கிராம் வீதம் எடுத்து, பால் விட்டு அரைச்சி, ஒரு டம்ளர் காய்ச்சின பால்ல கலந்து கூடவே பனங்கற்கண்டும் கலந்து தினம் காலைல குடிச்சிட்டு வந்தீங்கன்னாலும் உங்க தாது பலமாகும்.
முருங்கை பிஞ்சு கூட ஒரு சத்து மிகுந்த ஊட்ட உணவுதான். இதை சாப்போட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்க அப்படின்னா, இளைத்த உடல் தேறும். கண் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும். பார்வை பலப்படும், முடி உதிர்வை தடுக்கும். மூட்டு வலி, மலக்கட்டு, குடல் வறட்சி, வாய் துர்நாற்றம் இல்லாம போய்விடும். சூதகக்கட்டு நீங்கும், தாய்ப்பால் பெருகச்செய்யும்.
முருங்கைப்பூ, காய், இலை மூன்றையும் பருப்போடு சேர்த்து கூட்டு வைத்து, சாப்பிட்டு வாங்க. ரொம்ப ருசியாக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இத வீட்டுல நீங்களும் செஞ்சு பாருங்களேன். பிரமாதம் அப்படின்னு சொல்லுவீங்க.
முருங்கை இலையை நெய் விட்டு லேசா வதக்கி தோசை விடும் போது, தோசைக்கு மேல தூவி, சாப்பிட்டு பாருங்க. அருமை. அருமை....
நெய் உருக்கும் போது, முருங்கை இலையை போட்டு உருக்குவதை கிராமத்தில் இன்னைக்கும் பாக்கலாம். இது ஏன் அப்படின்னா, நெய் நீண்ட நாள் கெட்டும் போகாது. வாசனையும் பிரம்மாதமா இருக்கும்.
இத விட இன்னொரு ஆச்சரியமான விஷயம், நமக்கு தெரியாத விஷயம் என்னன்னா, முருங்கைப்பொடி டன் கணக்குல வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுது. ஆமா, நமக்குத்தெரியாத விஷயத்த வெளிநாட்டுக்காரன் உபயோகிக்கிறான் பாருங்க. இவ்வளவுக்கும் நம்ம பக்கத்துலதான் முருங்கை மரம் அதிகமா இருக்கு. ஆனா நாம அதப்பத்தியே தெரியாம இருக்கோம். முத்தின முருங்கை இலைகள எடுத்து நிழல்ல காயப்போட்டு, அத இடித்து, பருத்தி துணியில நல்ல சலித்து எடுத்துக்கோங்க. இத தினம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மோர்ல கலந்து குடிச்சிட்டு வந்தோம்னா, முருங்கை மரத்தோட சத்துக்கள் நேரடியாவே நமக்கு கிடைக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum