காலத்திற்கேற்ப உண்ணக்கூடிய கீரை வகைகள்
Sat Aug 06, 2016 8:00 am
காலத்திற்கேற்ப உண்ணக்கூடிய கீரை வகைகள்
நமது நண்பர்களில் சிலர் கீரைகளை குளிர் காலத்தில் சேர்த்துக்கொள்ளலாமா? வெயில் காலத்தில் சேர்த்துக்கொள்வது நல்லதா? இந்தகீரைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? இந்த கீரையை இந்த நோய் தாக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாமா? என்பது மாதிரியான சந்தேகங்களை கேட்டுகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவினை இப்போது தருகிறேன். இதன் படி நீங்கள் கீரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
#கோடை காலத்தில் (பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை) சாப்பிடும் கீரைகள் பற்றி முதலில் பார்ப்போம்.
வல்லாரைக்கீரை
பசலைக்கீரை
வெந்தயக்கீரை
சக்ரவர்த்தி கீரை
பசலைக்கீரை
கரிசலாங்கண்ணி கீரை
மணத்தக்காளி கீரை
தண்டுக்கீரை
அகத்திக்கீரை (மாதம் இருமுறை மட்டுமே)
#மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் (புரட்டாசி மாதம் முதல் மாசி மாதம் வரை) சாப்பிட ஏற்ற கீரைகள்.
கற்பூரவள்ளி
அரைக்கீரை
முசுமுசுக்கை
தூதுவளை
மூக்கிரட்டை
புதினா
சுக்கான்கீரை
#வருடம்_முழுதும் சாப்பிட தகுந்த கீரைகளும் உள்ளன. அவை:
வல்லாரைக்கீரை
முருங்கைக்கீரை
புளிச்சக்கீரை
அரைக்கீரை
பொன்னாங்கண்ணி கீரை
#குழந்தைகளுக்கு இப்படிபட்ட கீரைகள் கொடுக்கலாம்.
தூதுவளை
மூக்கிரட்டை
முருங்கை
கற்பூரவள்ளி
அரைக்கீரை
வல்லாரைக்கீரை
#உடலின்_உறுப்புகளை காக்கும் கீரைகள்:
தாம்பத்திய உறவு சிறக்க.
வல்லாரைக்கீரை
பசலைக்கீரை
முருங்கைக்கீரை
தூதுவளைக்கீரை
பசலைக்கீரை
புளிச்சக்கீரை
#தோல்களை மென்மையாக்கும் கீரைகள்:
பருப்புக்கீரை
சுக்கான் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
#மூளைக்கு வலு சேர்க்கும் கீரைகள்:
வல்லாரைக்கீரை
முருங்கைக்கீரை
#கல்லீரலை பாதுகாக்கும் கீரைகள்:
கீழாநெல்லி
கரிசலாங்கண்ணி
#குடலைப்பாதுகாக்கும் கீரை:
மணத்தக்காளி கீரை
#நரம்பு மண்டலத்தை சீராக்க உதவும் கீரைகள்:
தூதுவளை
புளிச்சக்கீரை
கொத்தமல்லிக்கீரை
#கண்களின் பார்வை தெளிவுடன் இருக்க உதவும் கீரைகள்:
முருங்கைக்கீரை
கருவேப்பிலை
பொன்னாங்கண்ணி
கொத்தமல்லி கீரை
#மூட்டுவலி போக்கும் கீரைகள்:
முடக்கறுத்தான் கீரை
கருவேப்பிலை
#கீரை_உண்பதை_தவிர்க்க_வேண்டியவர்கள் பற்றி பார்ப்போமானால்,
சிறுநீரக கற்கள், பித்தப்பையில் கற்கள், கருப்பைக்கட்டி, உள்ளவர்கள் பொதுவாக கீரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆஸ்துமா நோயாளிகள் அதிக குளிர்ச்சியை தரக்கூடிய வெந்தயக்கீரை, மணத்தக்காளி, முளைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவே கூடாது. அதற்குப்பதிலாக, கருவேப்பிலை, கற்பூர வள்ளி, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நரம்புத்தளர்ச்சி மற்றும் தாம்பத்திய குறைபாடுகள் கொண்டவர்கள் முருங்கைக்கீரை, தூதுவளை கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய கீரைகளை பருப்பு, மிளகு, சீரகம், நெய் போன்றவை சேர்த்து உண்டு வர நிவாரணம் கிடைக்கும்.
இரவு நேரத்தில் கீரைகளை உணவில் சேர்க்கக்கூடாது என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் எல்லோருக்கும் அது பொருந்தாது. அதாவது,
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், தீராத வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் இரவில் தாமதமாக உணவு உண்பவர்கள் இவர்களைத்தவிர்த்து மற்றவர்கள் இரவில் கீரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum