இது ஜப்பானில் நடந்த உண்மை கதை...!
Tue Mar 19, 2013 6:40 pm
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக
மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில்
பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு
இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை
பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி
இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை
சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து
ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி
இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு
பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை
கண்கானித்து கொண்டு இருந்தார்
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி
அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து
சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு
தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக
பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.
ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...
உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில்
உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா.
சிந்திப்பீர் மனிதர்களே...!
நன்றி: செம்மொழி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum