ஏமாந்தவன் இன்னொரு நபரை ஏமாற்றி
Sat Jul 30, 2016 8:24 am
அன்பு போதர்களே,
நம்மில் சிலர் வெளிநாடு சென்று சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறோம். பணம் சம்பாதிப்பது முதன்மையாக இராவிட்டாலும், நமக்கு ஒரு அங்கீகாரம் தேவை என விரும்புகிறோம்.
இதை எப்படியோ மோப்பம் பிடித்து நமக்கு முன்பின் அறிமுகமில்லதாவர்கள் நம்மிடம் வந்து நம்மை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல ஆண்டவர் அவர்களுக்கு பாரத்தை கொடுத்திருப்பது போல் பேசுகிறார்கள்.
நமக்கு மீட்டிங், தங்குமிடம், சாப்பாடு எல்லாம் அங்கு ஒழுங்கு செய்துவிடுவதாகவும், போகும் இடங்களில் கை நிறைய காணிக்கை கொடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் டிக்கெட் கூட அங்கிருந்தே நமக்கு அனுப்பி விடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் விசாவுக்கு மட்டும் நாம் பணம் தரவேண்டும் என்று சொல்கிறார்கள்.
அன்பு போதகர்களே, இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டும். ஜெபிக்க வேண்டும். ஞானமாய் நடந்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் விசா வந்தாலும் வரலாம்.... வராமலும் போகலாம். எனவே விசாவோடு உங்களை அழைத்தால் போங்கள். இல்லையென்றால், சந்தோசமாக உள்ளூரில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றுங்கள்.
ஒவ்வொரு நாளும் மனிதனை மனிதன் ஏமாற்ற புது புது யுக்திகளை கையாண்டு வருகிறான். அதில் இன்டர்நெட்டில் பல வியாபார உத்திகள் உள்ளன.
ஏமாந்தவன் இன்னொரு நபரை ஏமாற்றி தான் விட்ட பணத்தை சம்பாதிக்க நினைக்கிறான்.
ஜாக்கிரதை ஊழியர்களே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum