தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழ் இருப்பாதை அருஞ்சொற்பொருள்/TAMIL RAILWAY GLOSSARY Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் இருப்பாதை அருஞ்சொற்பொருள்/TAMIL RAILWAY GLOSSARY Empty தமிழ் இருப்பாதை அருஞ்சொற்பொருள்/TAMIL RAILWAY GLOSSARY

Fri Jul 22, 2016 9:24 pm
தமிழ் இருப்பாதை அருஞ்சொற்பொருள்/TAMIL RAILWAY GLOSSARY
 
A - வரிசை

ADEQUATE DISTANCE - போதும் தொலைவு - ஒரு இருப்பூர்தி குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது அதை தடையிட்டு நிறுத்தவைப்பதற்காக தேவைப்படும் பாதுகாப்பான தொலைவு
ADHESION - ஒட்டுமை - இயக்குசக்கரங்கள் தண்டவாளத்தில் ஏற்படுத்தும் பிடிப்பு, குறிப்பாக துவங்கும் நேரத்தில். இயக்குசக்கரங்களின் எடை இதற்கு சாதகமாக அமையும்
AIRCONDITIONED CHAIR CAR - குளிர்சாதன இருக்கை இருப்புப்பெட்டி
AIRCONDITIONED SLEEPER CAR/COACH - குளிர்சாதன படுக்கை இருப்புப்பெட்டி
ALIGNMENT - இருப்புவழி - ஒரு தொடரூர்தி மேற்கொள்ளும் மெய்யான இருப்பாதை வழி
ALL-CLEAR SIGNAL - முழுத்தெளிவுச் சைகை
APRON - ஏற்றிடம் - இருப்புப்பெட்டிகளின் சுமைகள் ஏற்ற அல்லது இறக்க; இருப்புப்பெட்டிகளை பழுதுபார்க்க அல்லது கழுவும் இடம்
ASHPAN - சாம்பல்பிடி - பரணி (grate) அடியில் அமைக்கப்பட்ட சாம்பலை பிடிக்கும் தட்டு
 
B - வரிசை
BALANCING SPEED - நிலைநிமிர் வேகம் - குறிப்பிட்ட சுமை மற்றும் சரிவிற்கான (gradient) ஒரு தொடரூர்தி உந்திப்பொறியின் பாதுகாப்பான நிலைத்த சீரியங்கு வேகம் (safe stable cruising speed)
BANKER - துணையுந்துப்பொறி - மலை அல்லது சரிவான இடங்களில் பின்புறம் இணைக்கப்பட்ட உந்துபொறி; இது சரிவில் தொடரூர்தியைத் தள்ள உதவு; மேலும் நிறுத்தியாகவும் (brake) மலையிலிருந்து இருப்புப்பெட்டிகள் பிரிவதையும் தடுக்கும்
BERTH - அணைகரை
BOGIE - இருப்புப்பெட்டி
 
C - வரிசை
CATENARY - சங்கிலியம் - மின்சார கம்பி அமைப்பு
CHAIR CAR - இருக்கை இருப்புப்பெட்டி
 
D - வரிசை
DEAD-END SIDING - முட்டுப் பக்கப்பாதை - வழித்தடமாகத தொடர்ச்சியில்லாத பக்கப்ப்பாதை (siding)
DOUBLE LINE - இரட்டை இருப்புப்பாதை
DRIVING CAB - இயக்கிருப்புப்பெட்டி - இழு-தள்ளு அமைப்பில் உந்துபொறி கடையிலிருந்தோ நடுவிலிருந்தோ தொரரூர்தியைத் தள்ளும்போது ஓட்டுநர் அமைந்துள்ள முதல் இருப்புப்பெட்டி
 
E - வரிசை
ENGINE (LOCOMOTIVE) - உந்துபொறி
 
F - வரிசை
FACING POINTS - விலகும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் இடம்
 
G - வரிசை
GAUNTLETED TRACK - பின்னல் இருப்புப்பாதை - நான்கு இருப்புகள் (rails) கொண்ட இருப்புப்பாதை; இதில் இருப்புகள் 1, 3 ஒரு தடமாகவும், இருப்புகள் 2, 4 மற்றொரு தடமாகவும் அமையும்
GRATE - பரணி
 
H - வரிசை
HEADWAY - இடைநேரம் - இரண்டு தொடந்துவரும் தொடரூர்திகளுக்கிடையே உள்ள நேரம்
HOTEL POWER - இருப்பு மின்சாரம் - இருப்பூர்தி விசிறி, விளக்கு ஆகியவற்றிற்கு செலவாகும் மின்சாரம்; இது மின்னாக்கி, மின்கல அடுக்கு அல்லது இருப்பூர்தி நிலையத்திலிருந்து பெறப்படுகிறது
 
I - வரிசை
 
J - வரிசை
 
K - வரிசை
KING LEVER - தலைப்பு நெம்புகோல் - தொலைவமைந்தச் சைகைகளின் ஆளியக்கத்தை செயலிழக்கச் செய்யும் நெம்புகோல்; இது சைகைகளை தன்னியக்கச் செய்யும்
 
L - வரிசை
LEVEL CROSSING - இருப்புப்பாதைக் கடவை
LOCOMOTIVE - உந்துபொறி
 
M - வரிசை
MARSHALLING YARD - பிரிப்பு முற்றம் - இருப்புப்பெட்டிகளை வெவ்வேறு தொடர்வண்டிகளாக பிரித்து ஒன்றுகூட்டும் முற்றம்
MONSOON LOAD - பருவமழைச் சுமை - பருவமழைக்காலத்தில் குறைக்கப்பட்ட தாங்குசுமை
 
N - வரிசை
 
O - வரிசை
 
P - வரிசை
PANTOGRAPH - வரைச்சட்டம் - மின்சார இருப்பூர்தியின் கூரை மீது அமையும் மின்சார கம்பிவடத்தை வருடும் மாழைச் சட்டம்
PHASE GAP - கட்ட இடைவெளி - ஒரு மின்நிலையம் பல்வேறு முனைகளில் சங்கிலியத்திற்கு (catenary) மின்சாரம் அளிக்கும் எல்லையைக் கடத்தும் போது ஏறபடும் சிறுநேர மின் துண்டிப்பு
POINTS - பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் அல்லது சேரும் இடம்
 
Q - வரிசை
 
R - வரிசை
RACK - இருப்படுக்கு - உந்துபொறி (engine) சேர்க்கப்படாத இருப்புப்பெட்டித் தொடர்
 
S - வரிசை
SIDING - பக்கப்பாதை - வழித்தடமாகத பயனாகாத இருப்புப்பாதை
SINGLE LINE - ஒற்றை இருப்புப்பாதை
SLEEPER (TRACK) - படுக்கட்டை
SLEEPER CAR/COACH - படுக்கை இருப்புப்பெட்டி
STABLING SHED/YARD - ஓய்வு முற்றம் - இருப்புப்பெட்டிகள் பயணங்களுக்கு சிறு இடைவெளிக்காக நிறுத்தப்படும் முற்றம்
STANDING LOAD - நிற்புப் பயண எடை - ஒரு இருப்புப்பெட்டியில் நிற்கும் மற்றும் அமரும் பயணிகளின் மொத்த எண்ணிக்கை
 
T - வரிசை
TRAILING POINTS - சேரும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை சேரும் இடம்
 
U - வரிசை
 
V - வரிசை
VESTIBULE - இணைப்புக்கூண்டு
 
W - வரிசை
 
X - வரிசை
 
Y - வரிசை

YARD - முற்றம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum