வெண்டைக்காய் மோர் குழம்பு
Mon Jul 18, 2016 8:46 pm
வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையானவை
மோர் – இரண்டேகால் கப்
வெண்டைக்காய் – 7
பச்சை மிளகாய் – 6
பொட்டுக்கடலை – ஒன்றரை மேசைக்கரண்டி
தனியா – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கடுகு – முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்டைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மூடி வைத்திருந்து வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் மஞ்சள் தூள் உப்பு தனியா பொட்டுக்கடலை சீரகம் ஆகியவற்றைப் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அடுப்பில் வைத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2 நிமிடங்கள் கழித்து வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு கறிவேப்பிலையைத் தூவி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பொங்கி வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து குழம்பில் சேர்க்கவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum