எலும்புகளை வலுவாக்கும் ஆலிவ் எண்ணெய்
Mon Mar 18, 2013 5:17 pm
ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம்
தெரியவந்துள்ளது. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் உலகம்
முழுவதிலும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்
ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில்
உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
மருத்துவர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வுக்காக எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக்
குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில்
தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில்
அவர்களது எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதன் பின்
எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் எண்ணெய்க்கு இருப்பதை
மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி
நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச்
சாப்பிட்டுவந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum