வாழைப்பூ அடை -கொலஸ்ட்ராலைக் குறைக்க
Mon Jul 11, 2016 8:30 pm
வாழைப்பூ அடை -கொலஸ்ட்ராலைக் குறைக்க
தேவையானவை: குதிரைவாலி அரிசி - 100 கிராம், மைசூர் பருப்பு - 30 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், முளைக்கட்டிய பாசிப்பயறு - 25 கிராம், வாழைப்பூ - முக்கால் கப், பெரிய வெங்காயம் - 1, வரமிளகாய் - 4 அல்லது 5, மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி தவிட்டு எண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். எல்லா வகைப் பயறு, பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும். வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, உப்பு, வரமிளகாயை அரைத்து, இதனுடன் ஊறவைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடைகளாக வார்க்கவும். மூடி போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
பயன்கள்: குதிரைவாலி, முளைக்கட்டிய பயறு ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மைசூர் பருப்பு, அடை மிருதுவாக இருக்க உதவுவதோடு, புரதம் மற்றும் இரும்புச் சத்தைத் தரும். வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum