டேர்ம் இன்ஷூரன்ஸ்: தவறான புரிதல்கள்... சரியான தீர்வுகள்!
Mon Jul 04, 2016 6:40 pm
இரா.ரூபாவதி
எதிர்கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி. வருமானம் ஈட்டும் அனைவரும் இந்த பாலிசியை வைத்திருப்பது அவசியம். டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்த தவறான புரிதல்களினால் பலரும் இந்த பாலிசி எடுப்பதை தவிர்த்துவிடுகிறார்கள். டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்து என்னென்ன தவறான புரிதல்கள் உள்ளன, அவற்றை எப்படித் தீர்ப்பது என்பது குறித்து நிதி ஆலோசகர் வி.கிருஷ்ணதாசன் விளக்கமாக கூறுகிறார்.
‘‘இன்றைய இளைஞர் கள் பலரும் படித்து முடித்தவுடன் வேலைக்குப் போக ஆரம்பித்துவிடுகி றார்கள். ஓரளவுக்கு நல்ல சம்பளமும் வாங்கு கிறார்கள். அதே நேரத்தில், எனக்கு எந்தவிதமான கடமையும் இல்லை. அதனால் எனக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டாம் என நினைக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு, வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
இது தவறு. டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்த வரை, குறைந்த வயதில் பாலிசி எடுக்கும் போது பிரீமியம் குறைவாக இருக்கும். எனவே, இளம் வயதிலேயே இந்த பாலிசியை எடுப்பது நல்லது.
பணம் திரும்பக் கிடைக்காது!
டேர்ம் இன்ஷூரன்ஸில், பாலிசிதாரர் மரணம் அடைந்தால் மட்டும்தான் க்ளெய்ம் கிடைக்கும். இல்லையெனில் எந்தவிதமான தொகையும் திரும்பக் கிடைக்காது. இதனால் பலரும் இந்த பாலிசியை எடுக்கத் தயங்குகிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புதான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸில் பிரீமியம் மிகவும் குறைவு. 30 வயதுடைய நபர் ரூ.50 லட்சம் கவரேஜுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய்தான் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். 65 வயது வரை கவரேஜ் எடுத்திருந்தால், பாலிசி காலம் முழுவதும் ரூ.2.10 லட்சம்தான் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே, கட்டிய பணம் இதை காரணமாக கூறி, பாலிசி எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் இல்லை.
வேறு முதலீட்டுடன் ஒப்பிடுவது!
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக செலுத்தும் பிரீமியத்தை வேறு வகையான இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் ஒப்பிடுகிறார்கள் சிலர். இதுவும் தவறான சிந்தனை. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாதுகாப்புக்காக என்பதை உணருவது அவசியம். 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இரண்டு சக்கர வாகனம் வாங்கும்போது, பாதுகாப்புக்காக ரூ.1000 கொடுத்து ஹெல்மெட் வாங்குவது போல விலை மதிக்க முடியாத உங்களின் எதிர்கால இலக்குகளை நிறைவேற்றத்தான் இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பதை புரிந்துகொள்வது முக்கியம்.
வயது அதிகம்!
40 வயதுக்கு அதிகமாக இருப்பவர்கள், தங்கள் உடல்நலத்தை கருதி, தங்களுக்கு அந்த பாலிசி கிடைக்காது என நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. 40 வயதுக்குப் பிறகு பாலிசி எடுப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம். அந்த மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும். அதாவது, 40 வயதுடையவருக்கு 50 லட்சம் ரூபாய் கவரேஜிக்கான டேர்ம் பாலிசியை ஆன்லைனில் எடுக்கும்போது பிரீமியம் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். சர்க்கரை, ரத்த அழுத்தம், வேறு எதாவது வியாதிகள் இருந்தால், அந்த வியாதிக்கான ரிஸ்க்கின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும்.
க்ளெய்ம் செய்வதில் சிக்கல்!
இன்னும் சிலர் டேர்ம் இன்ஷூரன்ஸின் கவரேஜ் தொகை அதிகமாக இருப்பதால், க்ளெய்ம் செய்வதில் சிக்கல் இருக்கும் என நினைக்கிறார்கள். மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான க்ளைய்ம் நடைமுறைகள் போலவே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கும் நடைமுறைகள் இருக்கும். எப்படி க்ளெய்ம் செய்ய வேண்டும், அதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த தகவல்களையும், பாலிசியில் யாரை நாமினியாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியம். சரியானபடிக்கு க்ளெய்ம் செய்தால் சிக்கல் இல்லாமல் இழப்பீடு கிடைக்கும்.
அதேபோல பாலிசி எடுக்கும்போது, கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக, சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஏனெனில் பாலிசி எடுக்கும்போது தரும் தகவல்களில் ஏதாவது தவறு இருந்தால், க்ளெய்ம் நிராகரிக்க அல்லது தாமதமாக வாய்ப்புள்ளது.
டேர்ம் இன்ஷூரன்ஸில் பாலிசிதாரர் மரணம் அடைந்தால் க்ளெய்ம் கிடைக்கும் என்பதால் இதைப் பலரும் அபசகுனமாகப் பார்க்கிறார்கள். இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதேபோல, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் இறந்துவிடுவார்கள் என்பது தவறான புரிதல். வாகனம் ஒட்டும்போது பாதுகாப்புக்காக சீட் பெல்ட் போட்டுக் கொள்வது போல, பாதுகாப்புக்காகத்தான் இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம்.
மரணத்துக்கு மட்டும்தான் க்ளெய்ம்!
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மரணம் ஏற்பட்டால்தான் க்ளெய்ம் கிடைக்கும். ஒருவேளை விபத்தில் சிக்கி ஏதாவது ஊனம் ஏற்பட்டால் க்ளெய்ம் கிடைக்காது எனக் கருதுகிறார்கள். இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க ரைடர் பாலிசி எடுத்தாலே போதும். அதாவது, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சற்று கூடுதல் பிரீமியம் செலுத்தி விபத்தில் ஏற்படும் ஊனத்துக்கும் கவரேஜ் பெற முடியும்.
சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ரைடர் பாலிசியில் விபத்தினால் மரணம் அடைந்தால், இரண்டு மடங்கு இழப்பீடு தருகின்றன. எனவே, தவறான புரிதல்களை தவிர்த்து விட்டு உங்களின் வாழ்க்கை் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து முடிவெடுப்பது நல்லது’’ என்று முடித்தார் கிருஷ்ணதாசன்.

வயது குறைவு!

சென்டிமென்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum